தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 37:5
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தருடைய வேலைக்காக மட்டும் ஒப்புக்கொடுப்போம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்திலிருந்து இரக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.
எப்படியெனில் வயலின் எஜமானாகிய போவாஸ், ரூத்திற்கு தாகம் தீர்ப்பதற்கான காரியங்ளையும் எடுத்து கூறினதும் அல்லாமலும் ரூத் 2: 10, 11
அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.
அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.
மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது அவள் தரையில் விழுந்து வணங்கி நான் அந்நிய தேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினால் உம்முடைய கண்களில் தயவு கிடைத்தது என்றாள். அதற்கு போவாஸ் ரூத்திடம், உன் புருஷன் மரணமடைந்த பிறகு, நீ உன் மாமியாருக்காக செய்ததும், நீ உன் தகப்பன், தாய், உன் ஜென்ம தேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிட்த்தில் வந்ததெல்லாம் எனக்கு விவரமாய் தெரிவிக்கப்பட்டது.
அல்லாமலும் ரூத் 2:12
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.
அதற்கு அவள் ரூத் 2:13
அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.
அதற்கு போவாஸ் ரூத் 2:14,
பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள், அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள்.
அல்லாமலும் ரூத் 2:15-17
அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம்பண்ணவேண்டாம்.
அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.
அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது.
மேற்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும் போது ரூத் வயலிலே பொறுக்கின வாற்கோதுமை ஒரு மரக்காலாக இருந்தது. அவள் அதை பொறுக்கினதை ஊருக்குள் எடுத்துக்கொண்டு வந்தாள். அதனை மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய் சாப்பிட்டு மீதி வைத்ததையும் எடுத்து மாமிக்கு கொடுத்தாள். அப்போது அவள் இன்று எங்கு கதிர் பொறுக்கினாய், எவ்விடத்தில் வேலை செய்தாய் என்று கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றான். அப்போது அவள் எல்லா விவரத்தையும் தெரிவித்து, இன்று நான் வேலை செய்த வயல் போவாசுடையது என்றாள். அப்போது நகோமி தன் மருமகளிடம் உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்.
பின்னும் அவள் சொன்னது அவன் நெருங்கின உறவின் முறையானும், நம்மை ஆதரிக்கிற சுதந்திரவாளியாயிருக்கிறான். பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்; போவாஸ் அறுத்து தீருமட்டும் என் வேலைகாரிகளோடே இருக்க சொன்ன காரியத்தை மாமிக்கு அறிவிக்கிறாள். அப்போது ரூத் அவளிடம் மகளே, வேறொரு வயலில் மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு , நீ அவன் வேலைகாரிகளோடே இரு என்றாள். அப்படியே அவள் கோதுமை அறுப்பும், வாற்கோதுமை அறுப்பு தீருமட்டும், போவாசுடைய வேலைகாரிகளோடே கூடியிருந்து, தன் மாமியோடே தங்கி இருந்தாள்.
பிரியமானவர்களே, மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா பின்மாறி மோவாபுக்குள் போகாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேலும் ஏதோ, அறிந்தோ, அறியாமலோ நம்முடைய வாழ்வில் தவறுகள் நடந்துக்கொண்டால், கர்த்தரிடத்தில் மடங்கி வந்து அவர் பாதம் தரைமட்டும் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுப்பதும், மற்றும் நம்முடைய முன்னோர்களின் பாரம்பரியம் அத்தனையும் விட்டுவிட்டு கர்த்தரிடத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்து வருவோமானால், அப்போது அவர் தம்முடைய சிறகின் மறவில் வந்தடைகிறவர்களுக்கு அவரால் மிகுந்த பலனை தருகிறார். அல்லாமலும் கர்த்தரின் சபையில் உள்ள ஊழியகாரர்களாகிய பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் நாம் பங்கு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமான காரியம். அல்லாமலும் எந்த ஒரு காரியத்தை நாம் செய்தால் சபையில் கர்த்தரிடத்தில் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். மற்றும் நாம் பரிசு்த ஆவியினால் நிரப்பப்பட்டு, ஆத்தும அறுவடை செய்ய வேண்டும். அவ்விதம் நாம் நடந்தால் கர்த்தர் நம்மை பார்க்கிறார். நம்முடைய தேவைகளை சந்தித்து அனுதினம் ஆலோசனை தந்து நம்மை நடத்தி செல்வார்.
இதனை தான் கர்த்தர் மணவாட்டி சபையாம் நகோமியும், அவளுடைய ஆத்துமாவாக ரூத்தையும், போவாசுடைய வயலாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபைக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேலும், நாம் அவருடைய மாம்சமாகிய அப்பத்திலும்,அவருடைய இரத்தத்திலும்,பங்குள்ளவர்களாகும் போது,அவர் நம்முடைய சுதந்தரவாளியாகிறார். இவ்விதம் நாம் அவருடைய வேலையில் உண்மையுள்ளவர்களாக இருந்து, ஆத்துமாவின் அறுவடை செய்தால் அவள் நம்மை நேசித்து, நம்மை திருப்திபடுத்துகிறவரும், நமக்கு கரம் தந்து தாங்குகிறவரும், யாரும் நம்மை எதிர்க்காதபடி பாதுகாக்கிறவரும், இவ்விதமாக எல்லாவற்றிலும் நம்மை ஆதரிக்கிறவராக காணப்படுவார். ஆதலால் நம்மை அவருடைய வேலைக்காக ஒப்புக்கொடுப்போமானால் நம்முடைய வஸ்திரம் வெண்மையாக்கப்படுகிறது. ஆதலால் நம்மை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.