தேவனுக்கே மகிமையுண்டாவதாக
2 கொரிந்தியர் 5:2,3
ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;
தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வேலை செய்தால் மட்டுமே சுதந்தரவாளியாக மாறுகிறோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தருடைய வேலைக்காக மட்டும் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
ரூத் 3:1 – 6
பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?
நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு.
அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
அதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களில் மணவாட்டி சபையாகிய நகோமி, தன்னுடைய ஆத்மாவாகிய ரூத்திடம்,என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும் படி நான் உனக்கு சவுக்கியத்தை தேடாமலிருந்தேனோ? நீ போவாசின் வேலைகாரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? அவன் இன்று இரவு களத்தில் வாற்கோதுமை தூற்றுவான். நீ குளித்து எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திகொண்டு, அந்த களத்திற்கு போ; அந்த மனுஷன் புசித்து குடித்து தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்படாமலிரு. பின்னும் அவள் சொன்னது , அவன் படுத்துக்கொண்ட போது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின் மேல் மூடியிருந்த போர்வையை ஒதுக்கி படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்ய வேண்டுவது இன்னதென்று உனக்கு சொல்வான். அதற்கு ரூத்,தன் மாமியிடம் நீர் என்னிடம் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்; அதற்கு பின்பு களத்திற்கு போய்; தன் மாமி கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.
பின்பு ரூத் 3:7
போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள்.
மேற்கூறப்படுகிற வசனம் போவாஸ் மூடியிருந்த போர்வையை ஒதுக்கி படுத்துக்கொண்டாள்.
பிரியமானவர்களே, நம்முடைய ஆத்துமா சுகமாய் வாழும்படியாக கிறிஸ்துவாகிய சபையில், பரிசுத்த ஆவியானவரால் போதிக்கிற சத்தியத்தின் படி,நாம் சத்தியத்தை கேட்டறிந்து, அதன் பிரகாரம்,அவருடைய வசனத்தால் நாம் பாவமன்னிப்பு பெற்று சுத்திகரித்து, கிறிஸ்துவால் ஞானஸ்நானம் பெற்று, பின்பு அவருடைய அபிஷேகத்தால் நிரப்பபடும்படியாக, அவர் பாதத்தில் நாம் காத்திருந்து விழுந்துகிடக்கிறவர்களாயிருந்து, அவருடைய போர்வையை பற்றிக்கொள்ள வேண்டும். இந்த போர்வை அவருடைய வயலில் உண்மையாக வேலைசெய்கிறவர்களுக்கு, சுதந்தரவாளிகளாயிருக்கிறவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இவ்விதம் கர்த்தரும் நமக்கு அவருடைய இரட்சிப்பை தந்து நம்மை சுதந்தரவாளியாக்கும்படியாக நாம் ஒப்புக்கொடுப்போம்
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.