தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 9:9
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எந்த சூழ்நிலமையிலும் கர்த்தரே தஞ்சம் என்று இருந்தால், அவர் நம்மை கைவிடமாட்டார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வேலை செய்தால் மட்டுமே,அவருடைய சுதந்தரத்தில் பங்கடைய முடியும் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
ரூத் 3:7-9
போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள்.
பாதிராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு, திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு,
நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்.
மேற்கூறப்பட்ட வசனங்கள் நகோமி தன் ஆத்துமாவை நோக்கி சொன்னது போல் போவாஸ், புசித்து, குடித்து மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அமபாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான்; அப்பொழுது அவள் மெள்ள போய், அவன் கால்களின் மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டான். பாதிராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு, திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதை கண்டு, நீ யார் என்று கேட்டான்; அவள்,நான் உம்முடைய அடியாளாகிய ரூத்,நீர் உம்முடைய அடியாள் மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்.
இதன் கருத்துக்களை ஆவியில் நாம் தியானிக்கும் போது, அம்பாரத்தின் அடியில் போவாஸ் படுத்திருப்பது எனனவென்றால் கோதுமைகளஞ்சியமும், புசித்து குடித்தும் அவன் மகிழ்ச்சியிருப்பதன் விளக்கம், பிதாவின் ராஜ்யத்தை அவர் திருஷ்டாந்தபடுத்தி, பின்பு நாம் நடுராத்தியிலும் அவர் சமூகத்தில் காத்திருந்து வெளுக்கும் வரையிலும் அவர் பாதம் அமர்ந்து அவருடைய கிருபை நம்மேல் பொழியும் படி இருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்பது இதன் கருத்தாகும். அப்படி நாம் அவர் பாதத்தில் இருந்தால் அவர் நமக்கு சுதந்தரவாளியாக இருக்கிறார் என்பதில் மாற்றமில்லை. அப்படியானால் அவர் கிருபை நாம் தைரியமாக பெற்றுக்கொள்ள முடியும். இவ்விதமாக நாம் இருப்போமானால் நாம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படடவர்களாக இருப்போம்.
ஏனென்றால் அதற்குரிய வசனம் ரூத் 3:10-12
அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.
இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்.
போவாஸ் ரூத்திடம் மேற்கூறப்பட்ட வார்த்தைகளை சொல்வதற்கு காரணம் என்னவென்றால், அவள் தன் வாழ்க்கையில் புருஷனை இழந்தும், தோல்விகள் சந்திச்சும், அவள் வேறு மோகம் கொள்ளும்படியாக உலகத்திற்கு பினனால் போகாமல் வயலில் வந்து கதி்ர் பொறுக்கினதினால் அவளுடைய முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும்,உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது என்று கர்த்தரின் சபைக்கு திருஷ்டாந்தபடுத்தப்படுத்தப்படுகிறது.அல்லாமலும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள். பிரியமானவர்களே மேற்கூறிய பிரகாரம் எந்த சூழ்நிலமைகள் வந்தாலும், நாம் கர்த்தர் மேல் மட்டும் நம்பிக்கையாயிருப்போமானால், கர்த்தர் நம்முடைய உத்தமக்குணத்தையும் சோதித்தறிந்து நம்மையும் இவ்விதம் ஆசீர்வதிக்கிற தேவனாயிருக்கிறார். இப்படியாக நம்மையும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.