தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஒசியா 2:19,20
நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.
உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நித்திய விவாகத்துகென்று ஆயத்தபடுகிறதின் திருஷ்டாந்தம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், எந்த சூழ்நிலமையிலும் கர்த்தரே தஞ்சம் என்று இருந்தால் அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.
அல்லாமலும் அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
ரூத் 3:12-18
நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்.
இராத்திரிக்குத் தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தானேயாகில், நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலமட்டும் படுத்துக்கொண்டிரு என்றான்.
அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.
அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.
அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.
மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, ரூத் போவாஸிடம், நீர் சுதந்தரவாளி என்று சொன்னதற்கு, அவன் நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான். இராத்திரிக்கு தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னை சுதந்தர முறையாய் விவாகம் பண்ண சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம் பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம் பண்ண மனதில்லாதிருந்தானேயாகில்,நான் உன்னை சுதந்தர முறையாய் விவாகம் பண்ணுவேன் என்றுகர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன், விடியற்காலமட்டும் படுத்துக்கொண்டிரு என்றான்.
பிரியமானவர்களே கர்த்தர், இந்த வார்த்தைகள் நித்திய விவாகம் செய்வதை குறித்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். என்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை நித்திய விவாகத்துக்கென்று அழைத்து, பின்பு தெரிந்தெடுத்து, அதன்பின்பு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனை தெரியப்படுத்துகிறார். இதனை குறித்து
ஏசாயா 62:1-5
சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்.
ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்.
நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.
நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்.
வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் மணவாளனும், மணவாட்டியும் என்பதன் கருத்தை கர்த்தர் விளக்குகிறார். பிதாவாகிய தேவன் தன்னுடைய குமாரானாகிய கிறிஸ்துவை நம்முடைய மத்தியில் பிரகாசிக்கப்பண்ணும் வரையிலும் அமராமலும் இருப்பேன் என்கிறார். அவ்விதம் பிரகாசிக்கிற கிறிஸ்து, மணவாளனாகவும், பரிசு்த ஆவியானவர் நம்மில் இறங்கி மணவாட்டி சபையாகும் நம்மை மாற்றுகிறார். அதனை குறித்த வசனம் வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவது போல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள். மணவாளன் மணவாட்டியின் மேல் மகிழ்ச்சியாயிருப்பது போல, உன் தேவன் உன் மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
அல்லாமலும் யோவான் 5:19-23
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.
இவ்விதமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கையில், இதன் திருஷ்டாந்தத்திற்காகவே போவாசும், பின்மாறி மோவாபுக்கு போய் திரும்பி வந்த நகோமியின் ஆத்துமாகிய ரூத்தையும் கர்த்தர் நமக்கு நம்முடைய ஆத்துமா நம்மில் காக்கும்படியாக நாம் எவ்விதம் கர்த்தரோடு உறவு வைக்க வேண்டும் என்பதனை குறித்து கூறப்டுகிறது. அதுமட்டுமல்லாமல்
ரூத் 3:14-18
அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.
அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.
அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.
மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள்.
இதனை குறித்து நாம் பார்க்கும் போது நாம் எவ்விதம் கிருபையோடு வாழவேண்டும் என்றும், நம்முடைய ஆவியின் வளர்ச்சிக்கு தக்கதாக அவர் பரலோக ஆசீர்வாதங்களால் ஆசீர்வதிக்கிறார் என்றும் விளங்குகிறது. மேலும் நாம் அவர் பாதம் அமர்ந்து, அவர் நம்மை ஆசீ்வதிக்கும்வரையிலும், பரிசுத்தத்திலும், பொறுமையிலும் வாக்குதத்தம் நிறைவேற காத்திருக்க வேண்டும். இவ்விதமாக நாம் நம்மை கிறிஸ்துவினிடத்தில் ஒப்புக்கொடுப்போம்
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.