தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 16:5

கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் கிருபையினால் கர்த்தர் சிங்காசனம் அமைக்கிறார்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டிசபையாகிய நாம் கர்த்தரோடுகூட நித்திய விவாகத்துக்கென்று ஆயத்தபடுகிற காரியங்களை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

ரூத்:4:1-3  

போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்துகொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.

அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்.

அப்பொழுது அவன் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்.  

மேற்கூறப்பட்ட வசனங்களில்  போவாஸ், ரூத்திடம் போர்வை நிரப்பி வார்கோதுமை அனுப்பி விட்ட பிறகு  அவன் பட்டண வாசலில் போய் உட்கார்ந்துக்கொண்டிருந்தான்.  அப்போது போவாஸ் ரூத்திடம் சொல்லியிருந்த சுதந்திரவாளி அந்த வழியாக வந்தான்.  அப்போது அவனை ஓய் என்று பெயர் சொல்லி அழைத்து, இங்கே வந்து சற்று நேரம் உட்காரும் என்று சென்னான்;  அப்படியே வந்து உட்கார்ந்தான்.  அப்போது அவன் பட்டணத்து மூப்பர்களில் பத்துபேரை அழைத்து, அவர்களையும் உட்கார வைத்தான்.  அப்பொழுது அவன் அந்த சுதந்தரவாளியை நோக்கி; நம்முடைய சகோதரனாகிய எலிமெலேக்குக்கு இருந்த வயல் நிலத்தின் பங்கை மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்க போகிறாள்.  

இவ்விதம் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிற காரணம் என்னவென்றால், ரூத்தைக்காட்டி, இதன் விளக்கம் மோவாபிய கிரியைகளுள்ள நகோமியினுடைய ஆத்துமாவை வயலுக்கு ஒப்புமைப்படுத்தி, அந்த வயல் நிலம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தால் மீட்கபடவுள்ளது என்பதனை திருஷ்டாந்தபடுத்தி, அல்லது தேவனுடைய வார்த்தயினால்  மீட்கப்படும் என்பதனை நமக்கு விளக்குகிற வார்த்தையானது நகோமியானவள் தன்னுடைய நிலத்தை விற்கப்போகிறாள் என்று கூறப்படுகிறது.  

மேலும் போவாஸ், தன் சகோதரனாகிய சுதந்தரவாளியிடம் 

ரூத் 4:4-6  

ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல் நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.

அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.

இவற்றில் கூறபப்படுகிற கருத்து; போவாஸ், சுதந்தரவாளியிடம் மீட்டுககொள்ள மனதாயிருந்தால் மீடடுக்கொள்ளும், இல்லாவிட்டால் நான் மீட்டுக்கொள்கிறேன் என்றதற்கு நன் மீட்டுக்கொள்கிறேன் என்று அந்த சுதந்தரவாளி சொல்ல; போவாஸ் சொல்வது, நீ நகோமியின் கையில் அதனை வாங்கும்போது மரித்தவனுடைய சுதந்தரத்தில் பேர் அற்று போக பண்ணாதிருக்க, மரித்தவனுடைய மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்க வேண்டியது என்றான்.  இந்த வார்த்தையை கேட்ட சுதந்தரவாளி, நான் என் சுதந்தரத்தை கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ள மாட்டேன்;  நான் மீட்டுக்கொள்ள தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதனை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.  பின்னும் அந்த சுதந்தரவாளி சொன்னது மீட்கிறதிலும், மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிபடுத்தும்பொருட்டு, இஸ்வேலிலே பூர்வகால பழக்கம் என்னவென்றால் ஒருவன் தன் பாதரட்சயை கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான்.  இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.  அப்படியே அந்த சுதந்தரவாளி போவாசை நோக்கி; நீர் அந்த நிலத்தை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி தன் பாதரட்சையை கழற்றிப்போட்டான். 

அப்போது ரூத் 4:9-10 

அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.

இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றைய தினம் நீங்கள் சாட்சி என்றான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளை ஜனங்களும், மூப்பர்களுக்கும் சொல்ல, ஜனங்களும், மூப்பர்களும் 

ரூத் 4:11,12 

அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.

இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.

மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை அவர்கள் போவாசிடம் சொல்வது என்னவென்றால் , இந்த பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளி செய்ய போகிற சந்தானத்திலே, உன் வீடு தாமார் யூதாவுக்கு பெற்ற பேரேசின் வீட்டை போல ஆகக்கடவது போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான், அவள் ஒரு ஆண்பிள்ளையை பெற்றெடுக்க கர்த்தர் அனுக்கிரகம் பண்ணினார்.  அப்போது ஸ்திரீகள் நகோமியிடம் சுதந்தரவாளி அற்றுபோக பண்ணாதிருக்க  இன்று உனக்கு தயை செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.  அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும் , முதிர் வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக் கடவன்;  உன்னை சிநேகித்து, ஏழு குமாரரை பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனை பெற்றாளே என்றார்கள்.  நகோமி அந்த பிள்ளையை எடுத்து தன் மடியிலே வைத்து  வளர்த்து அதற்கு தாயானாள்.  

பின்பு ரூத் 4:17-22  

அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.

பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.

எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.

அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.

சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.

ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.

மேற்கூறப்படுகிற வசனங்களை நாம் தியானிக்கையில் ரூத், ஈசாயின் தகப்பனாகிய ஒபேதைப்பெற்றான்.  

பிரியமானவர்களே, கர்த்தர் இதனையெல்லாம் நமக்கு திருஷ்டாந்தபடுத்தியது என்னவென்றால், நம்முடைய வாழ்வில் தாவீதின் சிங்காசனம் அமைக்கிற காரியங்கள் விளங்குகிறது.  ஏனென்றால் ஜெயமெடுத்த  தேவ சபை நம்மில் விளங்கும் படியாக நகோமினுடய ஆத்துமாகிய ரூத், மணவாளனோடு  ஐக்கியப்படும்போது சபை ஜெயமெடுக்கிறது.  பின்பு அது தேவ சபையில் வைத்து காக்கப்படும் போது, தேவனுடைய கிருபையினால் தாவீதின் சிங்காசனம் வைக்கப்படுகிறது. அந்த சிங்காசனத்தில் கிறிஸ்து ராஜாதி ராஜாவாக வீற்றிருக்கிறார்.  இவ்விதம் நாமும் கிறிஸ்துவினால் ஜெயிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.