தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 55:16
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குள் மகிழ்கிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் நம்மில் கர்த்தர் கிருபையினால் சிங்காசனம் ஸ்தாபிக்கிறார் என்பதனை குறித்து திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 சாமுவேல் 1:1- 6
எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.
அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.
அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் இருந்தார்கள்.
அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்குபோட்டுக் கொடுப்பான்.
அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.
கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.
மேற்கூறிய வசனங்களில் எப்பிராயீம் மலை தேசத்திலிருக்கிற சோப்பீம் எனப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷனுடைய பெயர் எல்க்கானா.அவன் எப்பிராயீமினாகிய சூப்புக்கு பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். அவர்கள் யாரென்றால் அன்னாளும், பெனின்னாளும். பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லாதிருந்தது. ஆனால் எல்க்கானா வருஷம் தோறும் சீலோவிலே சேனைகளின் கர்த்தரை பணிந்துக்கொள்ளவும், அவருக்கு பலியிடவும், தன் ஊரிலிரந்து போய் வருவான்.; அங்கே ஆசாரியனான ஏலியின் குமாரராகிய ஓப்னியும், பினெகாசும் இருந்தார்கள். அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லா குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கிட்டு கொடுப்பான். அன்னாளை சிநேகித்தப்படியினால் அவளுக்கு இரட்டிப்பான பங்குக் கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார். கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.
இந்த காரியங்கள் நம்முடைய ஆத்தும இரட்சிப்புக்காக கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்தியது. ஆதலால் பிரியமானவர்களே உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்பதை நாம் யாவரும் உணர்ந்துக்கொண்டு, உலகம் நம்மை சிநேகிக்கும் போது அதனால் சந்தோஷப்படாமல், கர்த்தரிடத்தில் நாம் எப்போதும் சந்தோஷமாயிருக்க வேண்டும். இதனைக்குறித்த விளக்கங்கள் கர்த்தருக்கு சித்தமானால் கிருபையில் நாளை தியானிப்போம்
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.