தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 57:3

என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம், நம்மை சிறுமைப்படுத்தி கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து இரட்சிப்பை சுதந்தரமாக்கி கொள்வோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தருக்குள் மகிழ்கிறவர்களாக இருக்கவேண்டும்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 சாமுவேல் 1:7- 10

அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.

அவள் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்.

சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான்.

அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

மேற்க்கூறப்பட்ட வசனங்களில் அன்னாளுக்கு உலக சிநேகம் இருந்தபடியல் அவளுடைய இடரட்சிப்பை கர்த்தர் தடைபண்ணி வைத்திருக்கிறதை பார்க்கிறோம்.  அல்லாமலும் அவளுடைய சக்களத்தி அவள் துக்கபடும்படியாக அவளை விசனப்படுத்துகிறாள். அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு போகும் போதெல்லாம், அவன் வருஷம் தோறும் இரண்டு மடங்கு கொடுக்கிறதினால் பெனின்னாள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுக்கொண்டிருப்பாள்.  அப்போது அவள் புருஷனாகிய எல்க்கானா, அவளைப்பார்த்து; ஏன் அழுகிறாய், ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்.சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய  ஏலி கர்த்தருடைய ஆலயத்தில வாசல்நிலையண்டையில் ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்து இருந்தான். 

அப்போது அவள் போய் மிகவும் மனங்கசந்து,மிகவும்அழுது கர்த்தரை நோக்கி விணணப்பம் பண்ணி 

1சாமுவேல் 1:11-14

சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.

அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,

அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் கர்த்தரிடத்தில் தன்னை ஒப்புக்கொடுக்கிறாள். எப்படியெனில் என்னுடைய சிறுமையை கண்ணோக்கிப்பார்த்து,  உம்முடைய அடியாளை மறவாமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையை கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன் என்றாள்.  மேலும் அவன் தலையின் மேல் சவரகன் கத்திபடுவதில்லை  என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.  பிரியமானவர்களே நம்முடைய இரட்சிப்புக்காக அன்னாளை போல காத்திருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.  நம்மை உலகம் சிநேகிக்கிறது என்றால் இரடசிப்பு தாமதிக்கிறது.  ஆனால் நம் உள்ளத்தை அறிகிற தேவன், நாம் கர்த்தரிடத்தில் பூரண ஒரு இரட்சிப்புப் பெற்றுக் கொள்ளும் வரையில், நம்மை பலவிதத்தில் நெருக்கி, விசனப்படுத்துவார்.  அது தான் அன்னாளுடைய வாழ்விலும் நடத்தது; கர்த்தர் இதனை நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

மேலும் பெனின்னாள் குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றாள் என்று சொல்லப்படுவது உலக சபையை காட்டுகிறது.  ஆனால் அன்னாளுக்கோ பிள்ளையில்லாமல் இருந்ததின் காரணம், அவள் வாழ்க்கையில் உலகத்தை ஒரு பொருளாக எண்ணாமல் இருக்கும் வரையிலும், கர்த்தர் அவள் உள்ளத்தை உடைக்கிறார்.  அவ்விதமாக உடைத்து அவளுக்குள் ஒரு ஜீவன் விளங்கப்பண்ணுகிறார்.  அந்த ஜீவன் விளங்க காரணமாக இருந்தது, ஆலயமும், ஆசாரியனும் என்பது, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம்.  ஆதலால் உலக சிநேகம் ஒருபோதும் நம்மை இரட்சிக்காது.  பரலோகமே நம்மை இரட்சிக்கிறது. ஆதலால் நம்மை சிறுமைப்படுத்தி,என்னை கண்ணோக்கும், என் ஆத்துமாவுக்கு ஒரு இரட்சிப்பை அருளிச் செய்யும், என் வாழ்நாளெல்லாம் உமக்கென்று என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்று நாம் பொருத்தனை பண்ணி ஜெபிப்போமானால் கர்த்தர் நமக்கு இரட்சிப்பை அருளுவார்.  நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்.  இப்படியாக நம்மையும் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.