தேவனுக்கே மகிமையுண்டாவதாக

உன்னதப்பாட்டு 7: 12

அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் நினைத்தருளுகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், நம்மை சிறுமைப்படுத்தி கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து இரட்சிப்பை சுதந்தரமாக்கி கொள்வோம் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 சாமுவேல் 1:12- 19 

அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,

அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.

அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.

உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள்.

அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.

அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைந்தருளினார்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களின் கருத்துகள் நாம் பார்க்கும் போது, அன்னாள் கர்த்தரின் சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம் பண்ணும்போது, ஏலி அவள் வாயை கவனித்துக்கொண்டிருக்கிறான். அவள் சத்தமோ கேட்கப்படவில்லை.  ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து அவளை நோக்கி; நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னை விட்டு விலக்கு என்றான்.  அதற்கு  அன்னாள் பிரதியுத்தரமாக; அப்படியல்ல நான் மனகிலேசமுள்ள ஸ்திரீ, நான் திராட்சரசமாகிலும், மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் க கத்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றி விட்டேன் என்றாள்.உம்முடைய அடியாளை பேலியாளின் மக்களாக எண்ணதேயும்; மிகுதியான விசாரத்தினாலும், கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம் பண்ணினேன் என்றாள்.  அதற்கு ஏலி சமாதானத்தோடே போ என்றும் ஆசாரியனுடைய பதிலை கேட்ட அன்னாள் புறப்பட்டுப் போய் போஜனம் செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாக இருக்கவில்லை.  பின்பு அவர்கள் எழுந்து கர்த்தரை பணிந்துக்கொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்கு திரும்பி போனார்கள்;  எல்க்கானா அவளை அறிந்தான்.  கர்த்தர் அவளை நினைத்தருளினார்.  

பிரியமானவர்களே அன்னாளை நம்முடைய ஆத்தும இரட்சிப்பை சுதந்தரிக்க வேண்டிய விதத்தை திருஷ்டாந்தத்தோடு காட்டுகிறார். பல வருடமாக பிள்ளை இல்லாதபோது சக்களத்தியினால் நெருக்கப்படும் போது, அவள் சீலோவிலே கர்த்தரை தொழுதுக்கொள்ள போயிருக்கும் போது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது; தன் உதடுகள் மாத்திரம் அசையும்படியாக விண்ணப்பம் பண்ணுகிறாள்.  அப்போது ஏலி அதனை பார்த்து அவள் வெறித்திருக்கிறாள் என்று சொல்லும் போது , நான் மனகிலேசமுள்ள ஸ்திரீ, மதுவோ, திராட்ச ரசமோ குடிக்கவில்லை என்று அவள் சொன்னதும், தன் இருதயத்தை கர்த்தரின் சந்ததியில் ஊற்றி விட்டேன் என்றாள்.  இதிலிருந்து தெரிய வருவது அவள் தன் மன வேதனை அத்தனையும் பிறருக்கு தெரியாமல் கர்த்தருக்கு முன்பாக ஊற்றுகிறாள்.  தன் வாழ்வில் இருந்த குற்றங்களை கர்த்தரிடத்தில் அறிக்கைபண்ணியிருப்பாள்.  ஆனாள் ஏலி அவளிடத்தில் கேட்டதற்கு தான் பேலியாளின் மகள் அல்ல என்றும் மிகுதியான விசாரத்தினாலும், கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம் பண்ணினேன் என்று சொல்லும்போது, ஏலி சமாதானத்தோடே போ என்கிறான்.   

மேலும் நாமும் இவ்விதம் நம் உள்ளத்தை  கர்த்தரிடத்தில் ஊற்றுவோமானால் நமக்கும் சமாதானம் தந்தருள்வார். பின்பு அன்னாள் போஜனம் பண்ணுகிறாள்; இவை கிறிஸ்துவின் பரிசுத்த பந்திக்கு திருஷ்டாந்தம்;  அவர் பந்தியில் பங்குள்ளவர்களானால் அவரோடுகூட பிழைத்தும் இருப்போம். அவ்விதம் ஆத்துமா ஜீவிக்குமானால், நம்முடைய துக்கம் நீங்கி போகும். அவ்விதம் நம்முடைய துக்கம் நீக்கபடும்போது, நாம் அதிகாலையில் கர்த்தரை தொழுதுக்கொள்வோம். நாம் அதிகாலையில் அவரை தேடுவோமானால் கர்த்தர் நம்மையும் நினைத்தருளுவார்.  இவ்விதம் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.