தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 71:3

நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் நினைத்தருளி இரட்சிக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் நினைத்தருளுகிறார் என்பதனை குறித்து   தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்றவென்றால் 

1 சாமுவேல் 1:20-22  

சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.

எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான்.

அன்னாள் கூடப்போகவில்லை; அவள்: பிள்ளை பால்மறந்தபின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய் விடுவேன் என்று தன் புருஷனிடத்தில் சொன்னாள்.

மேற்க்கூறப்படுகிற வசனங்களை நாம் தியானிக்கும் போது, கர்த்தர் அன்னாளை, அதிகாலையில் தேவனை தேடினதால், நினைத்தருளினார்; ஆனால் சில நாள் சென்ற பின்பு அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனை கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள்.  எல்க்கானா கர்த்தருக்கு வருஷம் தோறும் செலுத்தும் பலிகளையும், பொருத்தனைகளையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அடைவரோடும்கூடப் போனான்.  ஆனால் அன்னாள் கூடப்போகவில்லை;  ஏனென்றால் அவள் பிள்ளை பால் மறந்த பின்பு, அவன் கர்த்தரின் சந்நியிலே காணப்படவும், அங்கே அவன் எப்பொழுதும் இருக்கவும், நான் அவனை அங்கே கொண்டு விடுவேன் என்று தன் புருஷனிடம் சொன்னாள்.  

அப்போது அவள் புருஷன் 1சாமு 1:23  

அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால்மறக்கப்பண்ணுமட்டும் இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால்மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள்.

இப்படியிருக்க அவள் அவனை பால் மறக்கபண்ணின பின்பு 

1 சாமுவேல் 1:24 

அவள் அவனைப் பால்மறக்கப்பண்ணினபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது.

இவ்விதமாக  கர்த்தருக்குச் செலுத்த வேண்டிய பலியை எடுத்து சென்றார்கள்;  அப்போது பிள்ளை இன்னும் குழந்தையாயிருக்கும் போதே, அவர்கள் ஒரு காளையை பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டு வந்துவிட்டார்கள்.  அப்பொழுது அவள் ஏலியினிடத்தில், இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரிடத்தில் இந்த குழந்தைக்காக விண்ணப்பம் பண்ணின ஸ்திரீ தான் என்பதையும், கர்த்தர் விண்ணப்பத்தின் படி கட்டளையிட்டார் என்றும் சொல்லுகிறாள்.  ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்டப்படியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனை கர்த்தருக்கென்றே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்.  அவன் அங்கே கர்த்தரை பணிந்துக்கொண்டான். 

பிரியமானவர்களே நம்மை கரத்தர் நினைத்தருளினாரானால் நிச்சயமாக நம்மை இரட்ச்சிப்பார் என்பதில் எந்த மாற்றமில்லை.  அதனால் தான் கர்த்தர் நமக்கு அன்னாளை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  எப்படியெனில் நம்முடைய ஆத்துமா ஜீவன் பெற்று உயிர்ப்பிக்கபட்ட பின்பு தேவ சபையின் உபதேசமாகிய கிறிஸ்துவின் களங்கமில்லாத ஞானப்பாலை குடித்து வளரும்போது, அனுதினம் நம்முடைய ஆவிக்குரிய வளர்சசிக்காக நாம் உட்கொள்ள வேண்டும்.  ஆனால் குறிக்கப்பட்ட வயதிலிருந்து தாய் பால்மறக்கபண்ணி, கடின ஆகாரம் புசிக்க வேண்டும்.  அவ்விதம் புசித்தால் தான் நம்முடைய ஆத்துமா செழிக்கும்.  அல்லாமலும் அப்படி  வளரக்கப்பட்ட குழந்தையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவாகிய நம்முடைய ஆசாரியனண்டையில் எப்போதும் தங்கியிருக்கிறதையே நாடவேண்டும்.  அதற்காக திருஷ்டாந்தபடுத்தும்படியாகவே, அன்னாள் குழந்தையாகிய சாமுவேலை பால்மறக்கபண்ணி ஆசாரியனாகிய ஏலியண்டையில் தேவாலயத்தில் கொண்டு வந்துவிடுகிறாள்.  அன்னாள் ஏலியாகிய ஆசாரியனிடத்தில் தன்னை காண்பிக்கிறவிதமாவது, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணின ஸ்திரீ நான் தான் என்றும், இந்த பிள்ளக்காக விண்ணப்பம் பண்ணினேன்: நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விணணப்பத்தின்படியே கர்த்தர் எனக்கு கட்டளையிட்டார்.  

இவ்விதம் கர்த்தர் நம்மை இரட்சித்ததை அவருக்கு முன்பாக அறிக்கைப்பண்ணி, நாம் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்காக வாழும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.