தேவனுக்கு மகிமையுண்டாவதாக

 ஏசாயா 44 :1-3

இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள்.

உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.

தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக, ஆமென்.   அல்லேலூயா.

யாக்கோபை தேவனுடைய வீடாக ஆசீர்வதிக்கிற விதம்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே முந்தின நாளில் நாம் யாக்கோபை தேவன் எவ்விதத்தில் ஆசீர்வதிக்கிறார் என்பதை குறித்து பார்த்தோம். மேலும் கர்த்தர் சொல்லுவது 

உபாகமம் 30 :19 - 20

நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,

கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.

ஆபிரகாம்,  ஈசாக்கு, யாக்கோபுக்கு கொடுப்பேன் என்று ஆணையிட்டு கொடுத்த தேசம், பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசம்.இந்த தேசம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தபடுத்தப்படுகிறது. நாம் யாவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரில் அன்பு கூர்ந்து         அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்போமானால் அவரே நம் ஜீவனும் தீர்க்காயுசுமானவர்.

அதைத்தான், நீதிமொழிகள் 3 :16-18

அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. 

அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். 

அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான். 

ஆனால் ,யாக்கோபுக்கு தேவன் எவ்விதத்தில் ஆசீர்வாதம் கொடுக்கிறார் என்றால் ஈசாக்கு, யாக்கோபை ஆசீர்வதித்ததை கண்டு ஏசா கோபத்தோடு இருக்கும்போது ரெபெக்காள்  யாக்கோபை

அழைத்து உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்று  போட  நினைத்து தன்னை தேற்றிக் கொள்கிறான்.

 ஆகையால் நீ எழுந்து சகோதரனாகிய லாபானிடத்திற்குப் போய் கோபம் தணியுமட்டும் சிலநாள் தங்கியிருந்து விட்டு கோபம் தீர்ந்த பின்பு நான் ஆள் அனுப்பி வரவழைப்பேன் என்றாள். 

 ஆனால் ரெபெக்காள் ஏத்தின் குமாரத்திகளினால் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது  என்று சொன்ன காரணத்தால் ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளில் பெண்கொள்  என்று கட்டளையிட்டான். 

ஆதியாகமம் 28:3,4

சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, 

தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி;

ஈசாக்கு யாக்கோபை அனுப்பி விடுகிறதை பார்க்கிறோம். அது போல் யாக்கோபு, தாய், தகப்பனுக்கு கீழ்ப்படிகிறான். 

ஆதியாகமம் 28:10

யாக்கோபு பெயர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, 

 பின்பு சூரியன் அஸ்தமித்தபடியினாலே ராத்திரி ஓரு இடத்தில் தங்கி அவ்விடத்து கற்களில் ஒன்றை எடுத்துத் தன் தலையின் கீழ்  வைத்து படுத்துக் கொண்டான்.

 அங்கே வைத்து அவன் ஒரு சொப்பனம் காண்கிறான்.

 ஒரு ஏணி பூமியில் வைக்கப்பட்டிருந்தது. அதின்  ஒரு நுனி  வானத்தை எட்டியிருந்தது, அதிலே  தேவ தூதர்கள் ஏறுகிறவர்களும்  இறங்குகிறவர்களுமாயிருந்தார்கள்.  

ஆதியாகமம் 28:13,15

அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்: நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். 

உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். 

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்;

 நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

 இங்கு நாம்  தியானித்த அந்த கல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதையும் அந்த ஏணி நமக்காக அவர் பரிந்து பேசுகிறதையும் அவர் ஜெபிக்கிற ஜெபம் பரலோகம்  எட்டுகிறதாகவும்,  மேலும் கர்த்தரிடத்தில் அந்த ஜெபம் பரலோகத்திற்கு கர்த்தருடைய தூதர்கள்  ஜெபம் தூபமாக  எடுத்துச் செல்கிறதையும் நாம் பார்க்க முடிகிறது. 

அதை, யோவான் 1:50, 51

 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். 

 பின்னும், அவர் அவனை நோக்கி:வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 

 யாக்கோபு நித்திரை தெளிந்து பார்க்கும்போது மெய்யாகவே கர்த்தர்  இந்த ஸ்தலத்தில் இருக்கிறார். இந்த ஸ்தலம் பயங்கரமாயிருக்கிறது என்று சொல்லி, இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல வானத்தின் வாசல் (கிறிஸ்துவுக்கு  அடையாளம் ).

இது நாம் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளுகிற ஆசீர்வாதத்தை தேவன் திரிஷ்டாந்தபடுத்துகிறார். யாக்கோபாகிய,  சபையாகிய நம்மை அவர் தம்முடைய இரத்தத்தால் மீண்டெடுத்து தம் ஜீவனை நமக்கு தந்து,  நம்மை காக்கும்படியாக நமக்கு ஜீவனையும்,  தீர்க்காயுசையும் தந்து அதை நாம் இழந்து போகாதபடி அவருடைய சரீரமாகிய சபையை நமக்குத் தந்து,  அந்த சபைக்குள்ளே  நாம் காக்கப் படும்படியாக நமக்காக இரவும்,  பகலும் ஜெபிக்கிறவராக இருந்து நம்மை காத்துக் கொண்டிருக்கிறார். இப்படி நம்மை காத்துக்கொள்ள காரணம் நாம் தேவனுடைய வீடாக இருக்கிறதால் தேவன்  அதில் வாசம்பண்ணி என்றென்றைக்கும்  அவருடைய ஜீவனும்,  தீர்க்காயுசுமாக நம்மை ஆசீர்வதிக்கிறார். 

 மேலும் யாக்கோபு தலைக்கு வைத்து கல்லை தூணாக நிறுத்தி,  அதற்கு எண்ணெய்  வார்த்து அதற்கு பெத்தேல் என்று பேரிட்டான்.

 யாக்கோபுடைய வாழ்க்கையில் தேவன் அவனையும், அவன் தங்கின இடத்தையும் தேவனுடைய வீடாகவும்,  பெத்தேல் ஆகவும் பெயரிட பண்ணுகிறார் .

மேலும் ,ஆதியாகமம் 28:21, 22

 என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;

நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான். 

இவ்விதமாக யாக்கோபை தேவன் சபையாக ஆசீர்வதிக்கிறார். ஜெபிப்போம். 

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிக்கிறார். 

                                                                                                                                                                                                -தொடர்ச்சி நாளை.