தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 25:1
கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்மை நாமாகவே கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா எப்படிபட்டதாயிருக்கிறது, என்பதை கர்த்தர் தம்முடைய வார்த்தையை நமக்குள் அனுப்பி, அவரோடு ஐக்கியபடுகிறவர்களை தமக்காக தெரிந்தெடுக்கிறர் என்பதனை குறித்து தியானித்தோம்.
பிரியமானவர்களே ஆசாரியராகிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம் ஆத்துமாவை தகனித்து, அவருக்காக ஆயத்தப்படுத்தும்படியாக நம்மிடம் கேட்கிறார். நாம் அவரிடத்தில் ஒப்புக்கொடாவிட்டால், நமக்கு அதற்கான சூழ்நிலைமை அமைத்து, நம்மை பலவந்தமாய் க ர்த்தருக்காக எடுத்துக்கொள்வார் என்பது நிச்சயம். ஆதலால் பிரியமானவர்களே அவர் நம்மை பலவந்தமாய் பிடிக்கும் முன்பாக நாமாகவே நம்மை அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.