தேவனுக்கே மகிமையுண்டாவதாக
மத்தேயு 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கவலைகள் போக்க கர்த்தரின் சந்நிதியில் நம்முடையஉள்ளம் உடைக்கப்பட்டு ஊற்றப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்மை நாமாகவே கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 2:17- 21
ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது; மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள்.
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான்.
அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்.
ஏலி எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக என்றான்; அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள்.
அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்.
மேற்கூறிய வசனங்களில் ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை. ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது; மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள். சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய் கர்த்தருக்கு முன்பாக பணிவிடை செய்தான். அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்துகிற பலியை செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம் சாமுவேலுக்கு ஒரு சின்ன சட்டையைத் தைத்துக்கொண்டு வருவாள். ஏலி எல்க்கானாவையும், அவன் மனைவியையும் ஆசீர்வதித்து; இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்ததற்கு பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக என்றான்; அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்கு போய் விட்டார்கள். அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும், இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்.
பிரியமானவர்களே நாம் வேத வசனங்களை தியானிக்கும் போது, நம்முடைய ஆத்துமாவின் வளர்ச்சி மிக முக்கியமானது. எப்படியெனில் கர்த்தர் அன்னாளயும், சாமுவேலையும், நமக்கு திருஷ்டாந்தத்துக்காக எடுத்துக் காட்டுகிறார். எப்படியென்றால் அவள் தன் வாழ்க்கையில் பெனின்னாளினால் மனமடிவாக காணப்பட்டு கர்த்தரின் சந்நிதியில் தன் உள்ளத்தை உடைத்து ஊற்றினதினிமித்தமாக கர்த்தர் முதலில் அவள் வாழ்வில் தேவனுடைய ராஜ்யம் ஸ்தாபித்து, அதோடுகூட அவளுக்கு சந்தானத்தையும் கொடுக்கிறார். அதுபோல நாமும் உள்ளம் உடைக்கப்பட்டவர்களாக கர்த்தரின் பாதத்தில் ஊற்றும்போது, நம் கவலைகள் போக்கி, கண்ணீர் துடைத்து, தேவராஜ்யம் நம்மில் ஸ்தாபித்து நம்மை உன்னதங்களின் சகல ஆசீர்வாதங்களினாலும் ஆசீர்வதிப்பார். இவ்விதமாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.