தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 84:10
ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை வெளிப்படுததி, தம்மையும் வெளிப்படுத்துகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாமும், நம்முடைய குடும்பமும் கர்த்தரின் பாதையை விட்டு விலகாமல் நடக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 3:1-10
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.
ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது.
தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான்.
அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,
ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப்படுத்துக்கொண்டான்.
மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை. திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்.
சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை.
கர்த்தர் மறுபடியும் மூன்றாம்விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து,
சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான்.
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துகளை நாம் தியானிக்கையில் சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாக கர்த்தருக்கு பணிவிடை செய்துக்கொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரததியட்சனமான தரிசனம் இருந்ததில்லை. சாமுவேல் என்பவன் அன்னாளின் ஆத்தும இரட்சிப்புக்கு திருஷ்டாந்தமாக கூறப்படுகிறது. இவை நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஆத்துமாவின் பலன் எவ்விதம் உண்டாயிருக்க வேண்டும் என்பதனை காட்டுகிறார். ஒரு நாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான். அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. ஆனால் சாமுவேல் தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்து போகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டான். அப்போது கர்த்தர் வந்து நின்று சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்கு சாமுவேல்: சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்றான்.
அப்போது கர்த்தர் சாமுவேலிடம் 1சாமுவேல் 3:11-14
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ, நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.
நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன்.
அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.
அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.
மேற்க்கூறிய வசனங்களை தியானிக்கும் போது கர்த்தர் இஸ்ரவேலில் செய்ய போகிறதும், மற்றும் அது இஸ்ரவேலிலுள்ள எல்லாருடைய இரண்டு காதுகளில் தொனித்துக்கொண்டிருக்கும் என்பதையும், ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாக சொன்ன யாவையும் வரபண்ணுகிறதையும், அதனை தொடங்கி, முடிக்கிற தேவன் என்பதையும், அவன் குமாரர் தங்களுக்கு சாபத்தை வரபண்ணுகிறதை அறிந்தும் தன் பிள்ளைகளை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், கரத்த்ர் அவன் குடும்பத்திற்கு தீங்காத நியாயத்தீர்ப்பை செய்வேன் என்று சொல்கிறார். அப்படியிருக்கிறதினால் அந்த பாவம் காணிக்கையினாலாவது, பலியினாலாவது நிவிர்த்தியாகாது என்றும் சொல்கிறார்.
இவ்விதமாக நம்முடைய காதுகளில் இந்த காரியம் தொனித்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட நியாயதீர்ப்பிலிருந்து நம்மை தப்பித்துக்கொள்ள வேண்டும். கர்த்தர் ஏலியின் குடும்பத்தாரை குறித்து பேசினதை கேட்டு விடியற்காலமட்டும் படுத்திருந்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவை திறந்தான். ஆனால் ஏலிக்கு தரிசனத்தை அறிவிக்கப்பயந்தான். ஆனால் ஏலியோ
1சாமுவேல் 3:16-21
ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன்: இதோ, இருக்கிறேன் என்றான்.
அப்பொழுது அவன்: கர்த்தர் உன்னிடத்தில் சொன்ன காரியம் என்ன? எனக்கு அதை மறைக்கவேண்டாம்; அவர் உன்னிடத்தில் சொன்ன சகல காரியத்திலும் யாதொன்றை எனக்கு மறைத்தாயானால், தேவன் உனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்வாராக என்றான்.
அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை.
சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது.
கர்த்தர் பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் ஏலி கர்த்தர் சாமுவேலுக்கு கொடுத்த தரிசனத்தை அறிந்தவனாக இருந்து, அதனை சொல்லும்படி கட்டாயப்படுத்தும்போது சாமுவேல் ஒன்றையும் மறைக்காமல் எல்லாம் ஏலிக்கு அறிவிக்கிறான். அதற்கு ஏலி அவர் கர்த்தர், அவர் தமது பார்வைக்கு நலமானதை செய்வாராக என்றான். சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனோடேக்கூட இருந்தார். அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றாகிலும் தரையிலே விழுந்துவிடவில்லை. சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கத்தரிசிதான் என்று தாண் முதல் பெயர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலருக்கெல்லாம் விளங்கினது. அதன் பின்பு சீலோவிலே தரிசனமாகி தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்கு தம்மை வெளிப்படுத்தினார்.
பிரியமானவர்களே கர்த்தர் நினைத்ததை மாற்றாமல் நடத்தி முடிக்கிறவர் என்பதையும், நாம் உண்மையும் நேர்மையுமாய் நடந்தால் கர்த்தர் நம்மோடு சிறு வயதிலிருந்தே பேசுவார் என்பதும், ஆனால் நாம் சிறு வயதில் கர்த்தரின் சமூகத்தில் பயந்து இருந்து, அவர் பேசுவதை கேட்க வேண்டும். என்னவென்றால் சாமுவேல் தான் கண்ட தரிசனத்தை ஏலி ஆசாரியனிடத்தில் சொல்வதற்கும் பயப்படுகிறான். இவ்விதமாக நம்முடைய ஆத்துமா கர்த்தரின் சமூகத்தில் பரிசுத்தத்தோடும், பயத்தோடும் வளரவேண்டும். இவைகளை நம் கருத்தில் கொண்டால் அவர் தம்முடைய வார்த்தைகளில் ஒன்றையும் தரையிலே விழ விடமாட்டார். அப்படி நாம் ஒவ்வொருநாளும் நம்மை புதுப்பித்துக் கொள்வோமானால் நம்மை தீர்க்கதரிசனத்தினால் நிரப்புவார். அந்த தீர்க்கத்தரிசனம் தான் கிறிஸ்து நம் உள்ளத்தில் செயல்படுகிறார்.
அவ்விதம் அவர் நம் உள்ளத்தில் வார்த்தைகளை தந்து அவரை நமக்கு வெளிப்படுத்துவார். நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். ஒப்புக்கொடுப்போம், ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.