தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 44: 26

எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தர் ஒருவரே உயர்ந்திருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை வெளிப்படுததி, தம்மையும் வெளிப்படுத்துகிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது 

1சாமுவேல் 4:1- 2

சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச் சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.

பெலிஸ்தர் இஸ்ரவேலருக்கு விரோதமாய் அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அவர்கள் சேனையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நாலாயிரம்பேர் வெட்டுண்டுபோனார்கள்.

மேற்கூறிய வார்த்தைகளில் சாமுவேல் வளர்ந்தான்;  கர்த்தர் சாமுவேலோடு தரிசனத்தாலும், மற்றும் அவருடைய வார்த்தைகளினால் தம்மை வெளிப்படுத்துகிறார்.  இவ்விதமாக சமுவேலின் வார்த்தை இஸ்வேலருக்கெல்லாம் வந்தது.  இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதபாக யுத்தம் செய்ய புறப்பட்டு எபெனேசருக்கு சமீபத்தில் பாளமிறங்கினார்கள்.  பெலிஸ்தரோ ஆபெக்கிலே பாளயமிறங்கினார்கள்.  பெலிஸ்தர் இஸ்ரவேலருக்கு எதிராக அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்தது.  இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அவர்கள் சேனையில் போர்களத்தில் ஏறக்குறைய நாலாயிரம் பேர் வெட்டுண்டு போனார்கள். 

பிரியமானவர்களே, இங்கு பார்க்கும் போது யுத்தம் துவங்குகிறதை பார்க்கிறோம்.  என்னவெனில் சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலருக்கு வந்தது, ஆனால் இஸ்ரவேலர் பெலிஸ்தரோடு யுத்தத்திற்கு ஆயத்தமாகிறார்கள்.  இதிலிருந்து தெரிய வருவது;  கர்த்தர் இஸ்ரவேலருடைய இருதயம் யுத்த களம் என்றும், முதலில் நம் ஆத்தும இரட்சிப்பு அடைநதவுடன் கர்த்தர் பெலிஸ்தனோடு யுத்தத்தில் இறக்குகிறார் என்பதும், இந்த பெலிஸ்தியன் நம் உள்ளத்தின் பொல்லாத குணங்கள் என்பதும் பெலிஸ்தர்களுடைய செயல்பாடுகள் நம் உள்ளத்தில் இருந்தால் அதனை அகற்றுவது தேவன் நம்மேல் வைத்திருக்கிற நோக்கமாயிருக்கிறது.  இதற்காகவே இங்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

இதனை ஏசாயா 2:6-11  

யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தரைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர்மேல் பிரியப்படுகிறார்களே.

அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை.

அவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும், தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்துகொள்ளுகிறார்கள்.

சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர்.

கர்த்தரின் பயங்கரத்துக்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்.

நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் பெலிஸ்தரின் கிரியைகளாயிருக்கிறது.  ஆதலால் கர்த்தர் அந்த கிரியைகளை அழித்து தீருமட்டும் நம்மில் யுத்தம் செய்து, நரரின் மேட்டிமையான கண்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டு, மனுஷரின் வீறாப்பும் தணிந்து கர்த்தர் ஒருவரே அந்நாளில் நம்மில் உயர்ந்திருப்பார்.  ஆனால் இங்கு நாம் வாசிக்கும் போது இஸ்ரவேலரில் ஏறக்குறைய நாலாயிரம் பேர் வெட்டுண்டு விழுந்தார்கள்.  இதன் காரணம் என்னவென்றால் அவர்களிடத்தில் கர்த்தரின் உடன்படிக்கைப்பெட்டி இல்லாதிருந்தது. ஆதலால் அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள் என்பது விளங்குகிறது.  

ஆதலால் பிரியமானவர்களே கர்த்தரின் வசனம் நம்மில் விளங்காவிட்டால் நாம் ஜாதிகளை மேற்க்கொள்ளமுடியாது.  இவ்விதம் நம்மில் வசனமாகிய சத்தியம் உண்டானால் நம்மில் கர்த்தர் ஜாதிகளின் கிரியைகளை நிர்மூலம் பண்ணி, கர்த்தர் ஒருவரே நம்மில் உயர்ந்திருப்பார்.  இவ்விதம் கர்த்தர் மட்டும் நம்மில் உயர்ந்திருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.