தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 77:1
நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் எந்த அருவருப்புகளும் இல்லாமலிருந்தால் மட்டுமே, நாம் பெலிஸ்திய கிரியைகளை முறியடித்து, நாம் பரிசுத்தமாக முடியும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தர் ஒருவரே உயர்ந்திருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது
1சாமுவேல் 4:3, 4
ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள்.
அப்படியே கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையில் இருந்தார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்கள் இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறியஅடிக்கப்பட்டார்கள்; ஆனால் ஜனங்கள் திரும்ப பாளயத்திற்கு வந்தபோது இஸ்ரவேலின் மூப்பர்கள் இன்று கர்த்தர் நம்மை பெலிஸ்தருக்கு முன்பாக முறியடித்ததென்ன; சீலோவிலே இருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியைக் கொண்டு வருவோம்; அது நம்மை பகைஞரின் கைக்கு விலக்கி இரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள். பின்பு கேரூபீன்களின் நடுவில் வாசமாயிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை எடுத்துவர ஜனங்கள் சீலோவாவிற்கு சொல்லியனுப்பினார்கள்.அங்கே ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும், பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியண்டையில் இருந்தார்கள்.
பின்பு 1சாமுவேல் 4:5, 6
கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி பாளயத்திலே வருகிறபோது, இஸ்ரவேலரெல்லாரும் பூமி அதிரத்தக்கதாக மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள்.
அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்டபோது: எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள்.
கர்த்தரின் உடன்படிக்கை வருகிறகிற போது ஜனங்களெல்லாரும் மகா சத்தமாய் ஆர்ப்பரித்தார்கள். இந்த சத்தம் என்ன என்று பெலிஸ்தர் அறிந்து கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துக்கொண்டார்கள். பின்பு பெலிஸ்தர் தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால் பெலிஸ்தர் பயந்து, ஐயோ, மோசம் நமக்கு மோசம் வந்தது. இதற்கு முன் ஒரு போதும் இப்படி நடக்கவில்லை, மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மை தப்புவிப்பவர் யார்? எகிப்தியரை சகலவித வாதைகளினாலும், வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே என்று இஸ்ரவேல் புத்திரை குறித்து பெலிஸ்தியர்கள் பயப்படுகிறார்கள்; அதனால் பெலிஸ்தியரே, திடங்கொண்டு புருஷரைபோல நடந்துக்கொள்ளுங்கள். எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாயிருந்தது போல, நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடிக்கு, புருஷராயிருந்து, யுத்தம் பண்ணுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள. அப்போது பெலிஸ்தர் யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து அவரவர் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். மகா சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலில் முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள். பிரியமானவர்களே
மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது இஸ்வேலராக நாம் ஜெயிக்க வேண்டுமானால், கர்த்தரின் வசனம் நம்மில் உண்டாயிருக்க வேண்டும. கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வரும் போது இஸ்ரவேலர் மகா சத்தமாய் ஆர்ப்பரித்தார்கள்.கர்த்தரின் பெட்டி எங்கே உண்டோ, அங்கே மகா சத்தமான ஆர்ப்பரிப்பு உண்டு. அவ்விதம் மகா சத்தமாய் ஆர்ப்பரித்ததால் எதிராக கடந்து கடந்து வருகிறவர்கள் பயப்படுவார்கள்; அப்படி பெலிஸ்தரும் பயப்பட்டார்கள். அவ்விதம் பயப்பட்டதால் அவர்கள் மிகவும் ஜாக்கிரதையோடு யுத்தத்திற்கு ஆயத்தப்பட்டார்கள். ஆனால் இஸ்ரவேலர் முப்பதிராயிரம் பேர் முறிந்தோடினார்கள். காரண்ம் அவர்களால் நிற்க முடியவில்லை; ஏனென்றால் கர்த்தரின் பெட்டியினண்டையில் அருவருப்பானவர்களாகிய ஓப்னியும், பினெகாசும் இருந்தார்கள்.
பிரியமானவர்களே இதிலிருந்து தெரிய வருகிறது என்னவென்றால் பரிசுத்தவாழ்க்கை நம்மிடத்தில் இல்லாவிட்டால் நாம் கர்த்தரின் சந்நதியில் சத்துருவோடு எதிர்க்கமுடியாது. கர்த்தர் இதனை எதற்காக நம் வாழ்க்கையில் திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால், நம் உள்ளத்தில் உள்ள பொல்லாத விருத்தசேதனம் இல்லாத பெலிஸ்தரின் கிரயைகள் நிர்மூலமாக்க வேண்டும். அப்படியானால் மட்டுமே நாம் தேவனை முழு உள்ளத்தோடு,மகிமைபடுத்தமுடியும்; கர்த்தரும் நம்மில் மகிமைப்படுவார். இதனால் தான் அநேகரால் பெலிஸ்தரின் கிரியைகளாக பொன்னும், வெள்ளியும், நாள் பார்ப்பது, குறிச்சொல்வது இப்படி இன்னும் பல துர் கிரியைகளிலிருந்து வெளியே வரமுடியாமல், அவர்கள் எங்கு பட்டு விழுகிறார்கள் என்பது தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அதனை தான் இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்று கர்த்தர் திருஷ்டாந்தபடுத்துகிறார். ஆதலால் பிரியமானவர்களே நாம் பரிசுத்தமாக வாழ்ந்து நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.