தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபிரெயர் 4:10
ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய பிள்ளைகளை கர்த்தருக்குள் வளர்க்கிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் எந்தவிதமான அருவருப்புகளும் இல்லாமலிருந்தால் மட்டுமே பெலிஸ்திய கிரியைகளை நிர்மூலமாக்க முடியும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 4: 1-22
சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச் சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.
பெலிஸ்தர் இஸ்ரவேலருக்கு விரோதமாய் அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அவர்கள் சேனையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நாலாயிரம்பேர் வெட்டுண்டுபோனார்கள்.
ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள்.
அப்படியே கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையில் இருந்தார்கள்.
கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி பாளயத்திலே வருகிறபோது, இஸ்ரவேலரெல்லாரும் பூமி அதிரத்தக்கதாக மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள்.
அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்டபோது: எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள்.
தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே.
ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே.
பெலிஸ்தரே, திடங்கொண்டு புருஷரைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாயிருந்ததுபோல, நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடிக்கு, புருஷராயிருந்து, யுத்தம்பண்ணுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
அப்பொழுது பெலிஸ்தர் யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள்.
தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் மாண்டார்கள்.
பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலையின்மேல் புழுதியை வாரிப் போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.
அவன் வந்தபோது: ஏலி ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது, ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனுஷன் வந்தபோது, ஊரெங்கும் புலம்பல் உண்டாயிற்று.
புலம்புகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த அமளியின் இரைச்சல் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனுஷன் தீவிரித்து வந்து, ஏலிக்கு அறிவித்தான்.
ஏலி தொண்ணூற்றெட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு, அவன் கண்கள் மங்கலாயிருந்தது.
அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்றுதான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.
செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக: இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டுப்போயிற்று என்றான்.
அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி ஆசனத்திலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான்; அவன் கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியால், அவன் பிடரி முறிந்து செத்துப்போனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருஷம் நியாயம் விசாரித்தான்.
பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்.
அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.
தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.
தேவனுடைய பெட்டி பிடிபட்டுப் போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றாள்.
மேற்கூறிய வார்த்தைகளின் கருத்து என்னவென்றால் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியை பெலிஸ்தர்கள் இஸ்ரவேலரிடத்தில் இருந்து பிடித்து விட்டார்கள், அப்போது தேவனுடைய உடன்படிக்கை பெட்டியண்டையில் இருந்த ஏலியின் இரண்டு குமாரர்களாகிய ஓப்னியும், பினெகாசும் மாண்டார்கள். பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன் வஸ்திரங்களை கிழித்து, தன் தலையின் மேல் புழுதியை போட்டுக்கொண்டு அன்றைய தினமே சீலோவுக்கு வந்தான்; பின்பு அவன் வந்தபோது ஏலி ஒரு ஆசனத்தில் உட்கார்ந்து வழியை பார்த்துககொண்டிருந்து; தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது, ஊரிலே அவன் செய்தியை அறிவிக்க ஊரெல்லாம் புலம்பல் உண்டானதால், ஏலி இந்த சத்தத்தை கேட்டு, இந்த அமளியின் இரைச்சல் என்ன என்று கேட்டான். அப்போது அந்த மனுஷன் விரைந்து தீவிரித்து இதனை ஏலிக்குஅறிவித்தபோது; ஏலிக்கு தொண்ணூற்றெட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு, அவன் கண்கள் மங்கலாயிருந்தது. ;அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்று படையிலிருந்து ஓடி வந்தேன் என்றபோது, ஏலி மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டதற்கு, செய்திக்கொண்டு வந்தவன் சொன்னது என்னவென்றால் இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், ஜனங்களுக்குள்ளே பெரிசங்காரம் உண்டானது என்றும்; உம்முடைய குமாரராகிய ஓப்னி, பினெகாஸ் என்ற இருவரும் இறந்துப்போனார்கள் என்றும், தேவனுடைய பெட்டி பிடிபட்டது என்பதையும்அறிவித்தான். அ வன் தேவனுடைய பெட்டியை குறித்து சொன்னவுடனே, ஏலி ஆசனத்திலிருந்து வாசல் பக்கமாய் மல்லாக்க விழுந்தான். மேலும் ஏலி கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியினால், அவன் பிடரி முறிந்து செத்து போனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருஷம் அரசாண்டான். பினெகாசின் மனைவியாகிய அவள் நிறை கர்ப்பிணியாக இருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும், தன் புருஷனும் இறந்து போனதை கேள்விப்பட்டபோது, கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிள்ளைப்பெற்றாள். ஆனால் அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையில் நின்ற ஸ்திரீகள்: பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதன் மேல் சிந்தை வைக்கவுமில்லை. ஏனென்றால் தேவனுடைய பெட்டி பிடிப்பட்டு, அவளுடைய மாமனும், அவளுடைய புருஷனும் இறந்து போனப்படியினால், அவள்: இஸ்ரவேலின் மகிமை விட்டுப்போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பெயரிட்டான். அவள் சொன்னது; தேவனுடைய பெட்டி பிடிபட்டுப் போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகி போயிற்று என்றாள்.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வார்த்தைகளின் கருத்துகளை நாம் நன்றாக கவனித்து நம்முடைய வாழ்வில் தேவ கோபம் வராதபடி பாதுகாக்கவேண்டும். ஏலி ஆசாரியனாக இருந்தபோதிலும், தன் குமாரரை அடக்காமல் இருந்ததால், கர்த்தரின் காணிக்கையின் மேல் ஜனங்கள் வெறுப்பாயிருந்தார்கள். மேலும் அவன் குமாரர்கள் ஆசரிப்புக்கூடார வாசலில் பொல்லாத கிரியைகள் செய்துக்கொண்டு, உடன்படிக்கை பெட்டியண்டையில் இருந்ததால் பெலிஸ்தர்கள் உடன்படிக்கை பெட்டியை பிடித்தார்கள். விருத்த சேதனம் இல்லாதவர்கள் கையில் உடன் படிக்கை பெட்டி அகப்பட்டு விட்டது. இதன் காரணம் என்னவென்றால் அழுக்காக வாழ்ந்தவர்கள் உடன்படிக்கைப் பெட்டியண்டையில் இருந்தார்கள். இதிலிருந்து நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்வது என்னவென்றால் நாம் கர்த்தருடைய வேலையை செய்யும் போது, தேவன் நமக்கு தந்த பிள்ளைகள் கர்த்தருக்குள் அடங்கி வாழவேண்டும். அப்படியில்லாவிட்டால் நம் பிள்ளைகள் என்று நினைத்து கர்த்தரின் வேலையில் எந்த பங்கும் கொடுக்கக்கூடாது. அவர்களில் ரகசிய பாவம் இருந்தாலும் கர்த்தர் அதனை காண்கிறார். என்னவென்றால் ஏலி அதனை அறிந்தும் தன் பிள்ளைகளுக்கு புத்தி எடுத்து சொல்லியும், அவர்களை அடக்காததினிமித்தம், இஸ்ரவேலின் மகிமை விட்டு போயிற்று. அதனால் கர்த்தர் அவனுடைய குமாரரையும், ஏலியையும் கர்த்தர் அடிக்கிறார். ஆதலால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மெல்கிசெதேக்கின் முறைமையின் படி நம்நடுவில் என்றன்றைக்கும் ஆசாரியராயிருக்கும்படி. நமக்காக பலபாடுகள்பட்டு, அடிக்கப்பட்டு, மரித்து, பின்பு மூன்றாம் நாளில் உயிர்தெழும்பி, என்றன்றைக்கும் உயிரோடிருக்கிறவராக, நம் உள்ளத்தில் வந்து வாசம்பண்ணி, நம்மை ஆசாரியரும், ராஜாக்களுமாக்கி இருக்கிறபடியினால், நாம் எப்போதும் ஜாக்கிரதையாக கிறிஸ்துவுக்குள் வாழுகிறவர்களாக இருக்க வேண்டும். ஆதலால் நம் பிள்ளைகளை கிறிஸ்துவுக்கேற்ற பிரகாரம் வளர்க்க வேண்டும்.
அதனைக்குறித்து தான் 1தீமோத்தேயு 3: 1-11
கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.
அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.
அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,
விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.
மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம்.
அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்.
மேற்கூறப்பட்ட கருத்துகளை கவனத்தில் வைத்து அவ்விதம் குடும்பத்தை நடத்துகிறவர்கள் கர்த்தரின் சபையை நடத்த முடியும். இல்லாமலிருந்தால் தேவகோபம் நம்மேல் எரியும்; அதுமட்டுமல்ல கர்த்தரின் மகிமை நம்மை விட்டு விலகும். அப்படியிருந்தால் நாம் சபையை நடத்த முடியாது. ஏனென்றால் அப்படிபட்டவர்கள் சபையில் பெற்றெடுக்கும் குழந்தை (ஆத்துமா) இக்கபோத் எனப்படும் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தபடுத்தி, தேவமகிமையற்ற ஆததுமாவாக காணப்படும்.
ஆதலால் பிரியமானவர்களே நாம் எப்போதும் கர்த்தரின் சித்தம் செய்கிறவர்களாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.