தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான் 5: 21
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வு மிக பரிசுத்தமாக, உள்ளத்தில் எந்த விக்கிரக கிரியைகளும் இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய பிள்ளைகளை கர்த்தருக்குள் வளர்க்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 சாமுவேல் 5:1- 7
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள்.
அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள்.
அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது.
ஆதலால் இந்நாள்வரைக்கும் தாகோனின் பூஜாசாரிகளும் தாகோனின் கோவிலுக்குள் பிரவேசிக்கிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை.
அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும்படிக்கு கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
இப்படி நடந்ததை அஸ்தோத்தின் ஜனங்கள் கண்டபோது: இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாயிருக்கிறபடியால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்று சொல்லி;
மேற்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும்போது பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியை பிடித்து, அதை எபனேசரிலிருந்து அஸ்தோத்திற்கு கொண்டு போனார்கள். அஸ்தோத்தில் தாகோனுடைய கோவில் இருந்தது. ஆதலால் அதனைகொண்டு வந்து தாகோனண்டையில் வைத்தார்கள். அஸ்தோத் ஊரார் மறுநாள் காலையில் எழுந்திருந்து வந்த போது, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தது; அப்போது அவர்கள் அதனை எடுத்து முன்னிருந்த நிலையில் நிறுத்தினார்கள். அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்த போது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், அதன் தலையும், இரண்டு கைகளும் உடைப்பட்டுக் கிடந்தது. தாகோனுக்கு உடல் மாத்திரம் மீதியாயிருந்தது.
ஆதலால் இந்நாள்வரையும் தாகோனின் பூஜாசாரிகளும், தாகோனின் கோவிலுக்குள் பிரவேசிக்கிற யாவரும் அதன் வாசற்படியை மிதிக்கிறதில்லை. அஸ்தோத் ஊராரை பாழாக்கும்படிக்கு கர்த்தருடைய கை அவர்கள் மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.இப்படி நடந்ததை அஸ்தோத் ஜனங்கள் கண்டபோது, இஸ்ரவேலின் தேவனுடைய கை, நமது மேலும், நம்முடைய தேவனாகிய தாகோன் மேலும் கடினமாயிருக்கிறபடியினால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கக்கூடாது என்று சொல்லி; பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைத்து, தங்களண்டையில கூடி வரசெய்து,
1சாமுவேல் 5: 8-12
பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து, தங்களண்டையிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணமட்டும் எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டுபோனார்கள்.
அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று; அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள், சிறியவர் துவக்கிப் பெரியவர்மட்டும், மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார்.
அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டுவந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.
அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.
செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று.
மேற்கூறட்ட வார்த்தைகளை தியானித்தால் தேவனுடைய பெட்டி விக்கிரக கோவிலில் வைக்கக்கூடாததாயும், மற்றும் தேவனுடைய வசனம் கைக்கொண்டு நடப்போமானால், அதற்க்கிடையில் எந்த விக்கிரக எண்ணங்கள் இல்லாதபடி பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேலும் உடன்படிக்கை பெட்டியானது தாகோனை கீழே விழ செய்தது மட்டுமல்லாமல், தலையையும், கைகளையும் துண்டாக்கியது. இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் கர்த்தருடைய வசனத்திற்கு முன்பில் எந்த விக்கிரக தேவர்களோ நிற்க முடியாது என்பதும், கர்த்தர் அந்நிய ஆவியை அழிக்கிறவர் என்பதும், மேலும் கர்த்தரின் கற்பனைகளின் படி நடக்கிறவர்கள் பரிசுத்த பாதையில் நடவாவிட்டால் கர்த்தரின் கரம் அவர்களுக்கு விரோதமாக பாரமாயிருக்கும்; அதெப்படியென்றால் அவர்களுக்கு வியாதியும், மற்றும் சாவும் உண்டாகிறது என்பது கர்த்தருடைய வார்த்தையில் வாசிக்கிறோம்.
ஆதலால் பிரியமானவர்களே, நாம் ஒருபோதும் விக்கிரத்தை சேவிக்கக்கூடாது என்பது தேவனுடைய கட்டளையாக இருக்கிறது. ஆதலால் நம்முடைய உள்ளத்திலும எந்த விக்கிரக கிரியைகளும் இல்லாதபடி நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.