தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 37:39

நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அவரவர் தவறுகளை உணர்ந்து கொண்டு தேவனை பின்பற்றுவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் மிக பரிசுத்தமாக எந்த விக்கிரக கிரியைகளும் இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது எனனவென்றால், 

1சாமுவேல் 6:1-3  

கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது.

பின்பு பெலிஸ்தர் பூஜாசாரிகளையும் குறிசொல்லுகிறவர்களையும் அழைப்பித்து: கர்த்தருடைய பெட்டியைப் பற்றி நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை நாங்கள் எவ்விதமாய் அதின் ஸ்தானத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்.

அதற்கு அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாய் அனுப்பாமல், குற்றநிவாரண காணிக்கையை எவ்விதத்திலும் அவருக்குச் செலுத்தவேண்டும்; அப்பொழுது நீங்கள் சொஸ்தமடைகிறதும் அல்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த முகாந்தரம் இன்னது என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள்.

மேற்கூறிய வசனங்களை தியானிக்கும் போது தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை, பெலிஸ்தர் கைப்பற்றி அவர்கள் தேசத்தில் ஏழு  மாதம் வைத்திருந்தார்கள்.  அல்லாமலும் அந்த பெட்டியை பிடித்து தகாத இடமாகிய தாகோனின் கோவிலில் கொண்டு வந்து  வைத்ததால் தேவனுடைய கரம் அவர்கள் மேல் பாரமாயிருந்தது, அநேகர் மூல வியாதியினால் வாதிக்கப்பட்டார்கள்; அங்கு சாவு மும்மரமாயிருந்தது.  அதனால் அவர்கள் தேவனுடைய பெட்டியை அங்கிருந்து அனுப்பிவிட பூஜாசாரிகளையும், குறிச்சொல்லுகிறவர்களையும் அழைப்பித்து, அந்த பெட்டியை எவ்விதம் அனுப்பிவிடலாம் என்று கேட்க; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை, அனுப்பினால் வெறுமையாய் அனுப்பாமல், குற்றநிவாரண காணிக்கையாக எவ்விதத்திலும் அவருக்கு செலுத்த வேண்டும்; அப்போது நீங்கள் சொஸ்தமடைகிறதுமல்லால் கர்த்தருடைய கை உங்களை விடாதிருந்த முகாந்தரம் இன்னது என்றும் உங்களுக்கு தெரியவரம் என்றார்கள்.  

பிரியமானவர்களே நாம் அறிந்தோ, அறியாமலோ இவ்விதமான தப்பிதங்களை செய்துக்கொண்டிருப்போமானால், குறிப்பாக கர்த்தருடைய வசனங்களாகிய கற்பனை பின்பற்றியும், உள்ளத்தில் விக்கிரக எண்ணங்களையும் சேர்த்து தேவனை தொழுதுக்கொள்வோமானால் நம்மேலும் கர்த்தரின் கரம் பாரமாயிருக்கும்.  ஆனால் இப்போதும் அவருடைய கரம் பாரமாயிருக்கிறதை உணராமற் இருக்கிறோம் என்பதனைர உணர்ந்து, நாம் செய்த தப்பிதங்களுகாக கர்த்தரிடத்தில் குற்றநிவாரண காணிக்கையக நம்முடைய உள்ளத்தில் உள்ள எல்லா தகாத செயல்களையும் விட்டுவிடுவோம் எனறு நம்மை முழுமையும் கிறிஸ்துவோடு ஒப்படைத்து சமர்ப்பிப்போமானால் கர்த்தர் நம் குற்றங்களை மன்னித்து, நம் வியாதிளை நம்மை விட்டு விலக்கி, நமக்கு அதனை குறித்து வெளிப்படுத்தி தருவார்.  இவ்விதமாக வாழ்க்கையில் வளரும் படி ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.