தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 108: 3

கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டிசபையாகிய நம்முடைய இருதயம் விருத்தசேதனம் உள்ளவர்களாக காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் அவரவர் குற்றங்களை உணரந்து, அறிக்கை பண்ணிவிட்டு, பின்பு கர்த்தரை பின்பற்ற கடவோம் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்ன வென்றால் 

1சாமுவேல் 6: 4

அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியனிக்கும போது கர்த்தர் பெலிஸ்தரின் மேல் பாரமாக வைத்த நம்முடைய கையை அவர்களை விட்டு நீக்கவேண்டுமானால்; அவர்கள் பூஜாசாரிகளிடமும், குறிச்சொல்லுகிறவர்களிடமும் கேட்ட ஆலோசனைக்கு அவர்கள் கொடுத்த பதில் என்னவென்றால் குற்ற நிவாரண காணிக்கையாக உங்களெல்லாருக்குள்ளும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தரின் அதிபதிகளின் இலக்கத்திற்கு தக்க மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்த வேண்டும்.  

ஆகையால் அவர்கள் சொன்னது 

1சாமுவேல் 6:5-14

ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள்மேலும், உங்கள் தேவர்கள்மேலும், உங்கள் தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களை விட்டு விலகும்.

எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினது போல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய்விட்டதும் இல்லையோ?

இப்போதும் நீங்கள் ஒரு புதுவண்டில் செய்து, நுகம்பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு,

பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரண காணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.

அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.

அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டுவந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,

கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள்.

அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியிலே செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக்கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.

பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்.

அந்த வண்டில் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது; அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும்போது அவர்கள் கூறிய பிரகாரம் அந்த குற்ற நிவாரணபலிக்காக கொண்டு வந்த காணிக்கையிருந்த அந்த வண்டில் பெத்ஷிமேஸின் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து நின்றது; அங்கு இருந்த பெரிய கல்லில் அந்த வண்டிலின் மரங்களை பிளந்து பசுக்களை கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக செலுத்தினார்கள்.  

பிரியமானவர்களே இதன் விளக்கம் நாம் தியானிக்கும் போது பெலிஸ்தியர்கள் தங்களை கர்த்தருக்காக முழுமையும் ஒப்புக்கொடுப்பதையும், அவர்கள் இருதயம் விருத்தசேதனம் செய்யப்படுகிறதையும் காட்டுகிறது. இதன் காரணம் நம்மில் அநேகர் உள்ளம் இவ்விதமான பெலிஸ்திய கிரியைகள் இருக்கிறதால், இந்நாளில் உணர்ந்து நம்மை கர்த்தருக்கென்று மட்டும் ஒப்புக்கொடுத்து, நம்முடைய இருதயம் விருத்தசேதனம் செய்து பெலிஸ்திய கிரியைகளை அழித்து கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.