தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யாக்கோபு 1:8
இருமனமுள்ளவன் தன் வழிகளிகலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் இருவழிகளில் நடந்து ஆத்துமாவை கெடுக்காதபடி பாதுகாக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயம் விருத்தசேதனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 சாமுவேல் 6:15-21
லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றைய தினம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்.
பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றைய தினம் எக்ரோனுக்குத் திரும்பிப் போனார்கள்.
பெலிஸ்தர் குற்றநிவாரணத்திற்காக, கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சுரூபங்களாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று,
பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.
ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,
கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்.
மேற்கூறப்பட்டிருக்கிற வார்த்தைகளில், பெலிஸ்தர்கள் கர்த்தருக்கு காணிக்கை கொண்டுவந்த வண்டிலின் மரங்கள் பிளக்கப்பட்டு, பசுக்களை கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்தினது, கர்த்தர்தான் தேவனென்று அறிந்து தங்கள் உள்ளங்கள் முழுவதையும் கர்ததருக்காக திறந்து கொடுத்ததை, கர்த்தர் நாம் எவ்விதத்தில் அவரிடத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார். அல்லாமலும் லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடு சேர்த்துக் கொண்டு வந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியை வண்டிலிருந்து இறக்கி அந்த பெரிய கல்லின் மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர் அன்றைய தினம் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளை செலுத்தி பலியிட்டார்கள். பெலிஸ்ரின் ஐந்து அதிபதிகளும் இதனை கண்டு எக்ரோனுக்கு திரும்பி போனார்கள்.
இதன் விளக்கங்கள் என்னவென்றால் இந்த பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகள், நம்மை கர்த்தரண்டையில் சேரவிடாதபடி, உலக ஆசை இச்சைகளுக்கு அடிமைபடுத்தி வருகிற இராட்சத ஆவிகள். இவர்கள் தங்கள் கிரியைகள் நடந்தேற விடாதபடி, கர்த்தர் அதனை தடுத்து நிறுத்தி, ஜனங்களை தன் வசமாக்கி கொண்டதால் இராட்சதர்களால் நின்று வரமுடியாதபடி தங்கள் ஸ்தானத்துக்கே போய்விட்டார்கள் என்பது இதன் கருத்து ஆகும். இவ்விதமாக நம்முடைய இருதயம் அந்நிய தேவர்களை விட்டு விலக கர்த்தர் கிருபை தருகிறார். மேலும் பெலிஸ்தர்கள் குற்ற நிவாரணத்திற்காக கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சொரூபங்களாவன அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று . பொன்னால் செய்த சுண்டெலியோவென்றால் அரணான பட்டணங்கள் துவங்கி பெலிஸ்தலிருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்கு சரியாக இருந்தது. ஆனால் அந்த கல் இந்நாள் வரைக்கும் பெத்ஷிமேஸின் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது. பெத்ஷிமேஸின் மனுஷர் கர்த்தரின் பெட்டிக்குள் பார்த்ததினால் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபது பேரை கர்த்தர் அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம் ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள். இந்த பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்க தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்கு போகும் என்று பெத்ஷிமேஸின் மனுஷர் சொல்லி கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி; அந்த கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள். நீங்கள் வந்து அந்த பெட்டியை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்றார்.
ஆதலால் பிரியமானவர்களே கர்த்தரின் வசனம் என்றாலே அது மிகவும் பரிசுத்தமானது. அந்த பரிசுத்தமான வார்த்தை தான் தேவன். அந்த நம்முடைய தேவனிடத்தில் எந்த விக்கிரகமாகிய அந்நிய தேவர்களுக்கும் இடமில்லை; அதுமட்டுமல்லாமல் கர்த்தரை சேவித்தும், பாகால்களை சேவித்தும், இருமனமுள்ளவர்களாக இருக்கமுடியாது. அவ்விதம் இரண்டு செயல்களை செய்வோமானால் நாம் குந்தி குந்தி நடக்கிறோம் என்பதனை தெரிந்துகொள்ளவேண்டும். அதுமட்டுமல்லாமல் இரு வழியில் நடப்போமானால் நிலையற்று வீழ்ந்து விடுவோம் என்பதில் மாற்றமில்லை. மேலும் தேவனுடைய கோபம் நம்மேல் பற்றி எரியும். ஆதலால் பரிசுத்தில்லாமல் யாரும் தேவனை தரிசிக்கமுடியாது என்பதனை உணர்நது இப்போதே கர்த்தரின் கையில் விழுவோம். ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.