தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 6:1

கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் சரீரமான சபையாக்கப்படவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை, இருவழிகளில் நடந்து கெடுக்காதபடி பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடி நாம் தியானிப்பது என்னவன்றால் 

1சாமுவேல் 7:1- 6

அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.

பெட்டி கீரியாத்யாரீமிலே அநேக நாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தாரெல்லாரும் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான்.

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள்.

பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்.

அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தருடைய பெட்டியை கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து கர்த்தருடையப் பெட்டியை எடுத்து , மேட்டின்மேலிருக்கிற அபினதாபின் வீட்டில் கொண்டு வந்து வைத்து, கா்த்தருடையப் பெட்டியைக் காக்கும்படி அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். பெட்டி கீரியாத்யாரீமிலே அநேக நாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கே இருந்தது.  இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தரை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது சாமுவேல் அவர்களிடம் சொன்னது; நீங்கள் முழு இருதயத்தோடும் கர்ததரிடத்தல் திரும்புவீர்களானால், அந்நிய தெய்வங்களையும் அஸ்தரோத்தையும் உங்களை விட்டு விலக்கி, உங்கள் இருதயத்தை கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்போது அவர் உங்களை பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கி விடுவார் என்றான்.  அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும், அஸ்தரோத்தையும்  விலக்கி விட்டு கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள். பின்பு அவர்கள் மிஸ்பாவிலே கூடி வந்து தண்ணீர்மொண்டு கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசப் பண்ணி, கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தோம் என்றார்கள்.  சாமுவேல் மிஸ்பாவிலே இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான். 

பிரியமானவர்களே இதிலிருந்து நமக்கு தெரிய வருகிறது என்னவென்றால் கர்த்தருடைய பெட்டி பரிசுத்தமில்லாமல்  வைக்கக்கூடாது என்பதை குறித்து, பரிசுத்தமில்லாமல் தேவனை தரிசிக்க முடியாது என்பதன் விளக்கம் தான் பெட்டிக்குள் பெத்ஷமேஸின் மனுஷர்கள் பார்த்ததால் கர்த்தர் அவர்களை அடித்தார் என்பதால் அவர்களால் கர்த்தரின் பெட்டியை வைக்கக்கூடாமல் அவர்கள் கீரியாத்யாரீமின் மனுஷரை அழைத்து அங்கு அனுப்பிவிடுகிறதை பார்க்கிறோம்.  ஆனால் அங்கு அந்த பெட்டியை மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே, பரிசுத்தபடுத்தப்பட்ட எலெயாசாரின் வீட்டிலே வைத்து காக்கிறார்கள். ஆதலால் பெட்டி கீரியாத்யாரீமிலே இருபது வருஷம் தங்கியிருந்ததால் இஸ்ரவேல் குடும்பத்தார் எல்லாரும் அதனை பார்க்கமுடியாமல் கர்த்தரை நினைத்து புலம்பிக்கொண்டிருந்தார்கள்.   மேலும் கர்த்தரின் பெட்டியை இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுக்காதபடி தேவன் தடை பண்ணிவைத்திருந்த காரணவென்றால் அவர்கள் கர்த்தரை முழு இருதயத்தோடு தேடாமல், அந்நிய தெய்வங்களையும், அஸ்ரோத்தையும பின்பற்றினதால் கர்த்தர் அதனை விலக்கி வைத்திருந்தார். பின்பு சாமுவேல் அவர்களிடம் கர்த்தர் ஒருவருக்கே ஆரானை செய்யுங்கள், அவர் உங்களை பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவார் என்று சொன்னபோது அவர்கள் எல்லா பொல்லாத வழிகளையும் விட்டு கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள்.  

இதன் விளக்கமோ என்றால் நம்மில் இருக்கிற பொல்லாத பெலிஸ்திய குணங்கள் எல்லாம் நாம் விட்டு விட்டாலோ கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்கிறோம்.  அவ்வாறு கர்த்தருக்கு ஆராதனை செய்கிறவர்கள் எல்லாரும் கூடுகிற இடம் மிஸ்பா என்னப்படுகிறது. அவ்விதம் இஸ்வேலர் மிஸ்பாவில் கூடி தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றைக்கு உபவாசம் பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தோம் என்றார்கள்.  அந்நாட்களில் சாமுவல் மிஸ்பாவிலே இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான். மிஸ்பா சபைகூடுகிற இடமும், அங்கே ஜீவ தண்ணீர் ஊற்றும்,மேலும் உபவாசம் செய்கிற இடமும்,  மற்றும் நியாயம் விசாரித்தலும், இவையெல்லாம் கிறிஸ்துவின் சரீரம் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறது.  ஆதலால் நாம் ஒரு மிஸ்பாவாக மாறும் படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.