தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 105:19
கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா எபெனேசர் என்பது ஆகும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாகவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது
1 சாமுவேல் 7:7-9
இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு,
சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.
அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச்செய்தார்.
இஸ்ரவேல புத்திரர் மிஸ்பாவிலே சபை கூடினதை அறிந்த பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள். அதனை கேட்ட இஸ்ரவேல் புத்திரர் பயமடைந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர்,சாமுவேலிடம், கர்த்தர் எங்களை பெலிஸ்தரின் கையிலிருந்து விடுவித்து இரட்சிக்கும்படி ஓயாமல் வேண்டிக்கொள்ள வேண்டும் என்றுகேட்டபோது, சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியை கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக செலுத்தி, இஸ்ரவேலுக்காக கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டதால், கர்த்தால் அவனுக்கு மறுமொழி அருளிசசெய்தார்.
பின்பு 1சாமுவேல் 7:10-13
சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டு விழுந்தார்கள்.
அப்பொழுது இஸ்ரவேலர் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தரைப் பின்தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குமட்டும் அவர்களை முறிய அடித்தார்கள்.
அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.
இந்தப்பிரகாரம் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தருக்கு விரோதமாய் இருந்தது.
மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை தியானிக்கையில் சாமுவேல் சர்வாங்க தகனபலி செலுத்துகையில், பெலிஸ்தர்யுத்தம் பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகாபெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்கள் மேல் அந்நாளில் முழங்க பண்ணி, அவர்களை கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக பட்டு விழுந்தார்கள். அப்பொழுது இஸ்ரவேலர் பெலிஸ்தரை பின் தொடர்ந்து, பெத்காரீம் பள்ளதாக்கு மட்டும் முறியடித்தார்கள். அப்போது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து மிஸ்பாவுக்கும், சேணுக்கும் நடுவாக நிறுத்தி; கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பெயரிட்டான். இந்த கல் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம்.
இதனை வாசிக்கிற பிரியமானவர்களே, பெலிஸதியரின் கிரியைகளாகிய பொன், வெள்ளி. நாள்பார்க்குதல் குறிச்சொல்லுதல் இவற்றையெல்லாம் நாம் நிர்மூலமாக்கி விட்டால், கர்த்தர் நமக்கு செய்கிற பெரிய உதவி ஆகும். அப்படிபட்டவர்களின் உள்ளம் எபெனேசர் ஆகும். நாம் அவ்விதம் ஆகும் படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.