Jun 04, 2020

தேவனுக்கே   மகிமையுண்டாவதாக

ஆமோஸ் 6:8

நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரமனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக .ஆமென். அல்லேலூயா .

யாக்கோபின் மாம்ச சிந்தைக்கான விளக்கம்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,யாக்கோபு தேவன் கொடுத்த தரிசனத்திற்கு

பிறகு கீழ்திசையாரின் தேசத்தில் போய் சேர்ந்தான். அங்கே வயல்வெளியில் ஒரு கிணற்றையும் அதின் அருகே மடக்கியிருந்த மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான். அந்த கிணற்றிலே மந்தைகளுக்கு தண்ணீர் காட்டுவார்கள்.அந்த கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது.

ஆதியாகமம் 29:3

அவ்விடத்தில் மந்தைகளெல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.

யாக்கோபு அவர்களிடம் நீங்கள் எவ்விடத்தாரோ என்று கேட்க அவர்கள் ஆரான் ஊரார்     என்று சொல்ல யாக்கோபு நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்க அறிவோம் என்றார்கள். அவன் லாபானின் சுக செய்தியை விசாரிக்க,அவர்கள் சுகமாய் இருக்கிறான் என்று சொல்லி அவன் குமாரத்தியாகிய ராகேல் அதோ ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.

அப்பொழுது அவன் இன்னும் வெகு பொழுதிருக்கிறதே, இந்த மந்தைகளை சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி மேய விடலாம் என்றான்.

ஆதியாகமம் 29 : 8

அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.

அப்போது ராகேல் தன் தகப்பனுடைய ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து சேர்ந்தாள், அப்போது யாக்கோபு ராகேலையும் தன் தாயின் சகோதரனுடைய ஆடுகளையும் கண்டபோது யாக்கோபு கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.

பின்பு ராகேலை முத்தஞ்செய்து சத்தமிட்டு அழுது தன் சொந்தத்தை ராகேலிடம் சொல்ல ராகேல் ஓடிப்போய் தகப்பனுக்கு அறிவிக்கிறாள்.

அதன் பின்பு ராகேலின் தகப்பன்,

 ஆதியாகமம் 29:14

அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.

யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கு சொன்னது போல் கேட்டு கீழ்திசையாரின் தேசத்தில் வந்து சேர்ந்தான். அங்கு வயல் வெளியில் காணப்பட்ட கிணறு சபையை காட்டுகிறது அந்த கிணற்றில் வைக்கப்பட்ட கல் (முத்தரிக்கப்பட்ட கிணறு) என்பதன் திருஷ்டாந்தத்தை காட்டுகிறது. மேலும் அங்குள்ள மேய்ப்பர்கள் அந்த கல்லை புரட்டி தான் தங்கள் ஆட்டுமந்தைகளுக்கு தண்ணீர் காட்டுவார்கள். அவர்கள் தண்ணீர் காட்டும்போது மாத்திரம் தான் அந்த கல் புரட்டபட்டு மீண்டும் அதை அந்த இடத்தில் வைத்து வைப்பது அவர்கள் வழக்கமாயிருந்தது. அந்த தண்ணீர் காக்கப்படும் படியாக அந்த கல் முத்திரையாக வைக்கப்பட்டிருக்கிறது.கிணறு என்பது ஆடுகள் தண்ணீர் குடிக்கிற இடமாகவும்,நாம் அந்த கிணறாகயிருக்கிறோம் என்பதில் மாற்றமில்லை.

அதைத்தான் ,

எபேசியர் 1:13-14 – ல் கூறப்படுவது

நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.

இதனை வாசிக்கிற தேவஜனமே ஒவ்வொரு வார்த்தைகளையும் நாம் வாசித்து கவனத்தில் கொண்டு வரவேண்டும். தேவனுடைய வார்த்தை ஒன்றும் வெறுமையானவை அல்ல. எல்லா வார்த்தைகளும் நமக்கு மிகுந்த பலன் தரும் வார்த்தைகள்.

அந்த கிணறு நம் உள்ளம் என்பதையும் யாக்கோபு அந்த கிணற்றில் ராகேல் கொண்டு வந்த ஆடுகளுக்கு தண்ணீர் காட்டுகிறான். மேலும் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டுகிற இடம் சபையாகவும் நாமும் மணவாட்டி சபையாகவும் இருக்க வேண்டும் என்றால் பரிசுத்த ஆவியால் முத்தரிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் தேவனுக்கு சொந்தமானவர்கள் அவருடைய மகிமையின் புகழ்ச்சிக்காக அந்த கிணற்றின் தண்ணீரால்    திருப்தியடைவார்கள் என்பதை, கர்த்தர் நாம் கிறிஸ்துவின் ஜீவ தண்ணீரால் மீட்கப்படுவதற்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேலும் ஆவியானவர் நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிறார். அதை ராகேலை ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருவதாக தேவன் நமக்கு காட்டுவது மனைவியாகிய மணவாட்டியின் பரிசுத்த ஆவியானவரால் ஆடுகளாகிய ஆத்துமாக்களுக்கு ஆகாரம் கொடுக்கிறதை தேவன்  திருஷ்டாந்தபடுத்துகிறார்.

மேலும், யாக்கோபு லாபான் வீட்டில் ஏழு வருஷம் வேலை செய்கிறான். ஆனால் மூத்தவள் லேயாள் இளையவள் ராகேல். யாக்கோபு ஏன் இளைவளாகிய ராகேலுக்காக வேலை செய்கிறான் என்றால் அவளை மனைவியாக்கிக் கொள்ளும்படியாக, காரணம் ராகேலோ ரூபவதியாக பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள். 

லேபாளின் கண்கள் கூச்சபார்வையாயிருந்தது. அதனால் யாக்கோபு ராகேலின் பேரில் பிரியம் வைக்கிறான். காரணம் கண்களின் இச்சை தான் ஆனால் ஏழு வருஷம் முடிந்தவுடனே லாபான் மூத்தவளாகிய லேயாளை யாக்கோபுக்கு கொடுக்கிறான். மறுநாள் தான் யாக்கோபு கண்டு லாபானிடத்தில் கேட்கும் போது மூத்தவள் இருக்க இளையவளை கொடுப்பது இவ்விடத்து வழக்கமில்லை என்று சொல்கிறான். லேயாளுக்காக சில்பாளை வேலைக்காரியாக கொடுக்கிறான்.

மேலும் லாபான் யாக்கோபிடம் ஏழு நாள் கழித்து ராகேலை உனக்குத் தருவேன்; அவளுக்காக நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலை செய் என்கிறான். பின்பு அவன் குமாரத்தியாகிய ராகேலை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுக்கிறான். பில்காளை தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாக கொடுக்கிறான்.

ஆதியாகமம் 29:30

யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான்.

ஆதியாகமம் 29:31

லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.

இவ்விதமாக லேயாள் குமாரர்களை பெற்று எடுக்கிறாள். ரூபன்,சிமியோன், லேவி,யூதா  நான்காவது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி யூதா என்று பெயரிடுகிறாள்.

மனுஷர்களுக்கு முன்பாக அற்பமாயிருக்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக ஆசீர்வாதமாயிருப்பார்கள். என்பதற்கு அடையாளமாக கர்த்தர் கூச்ச பார்வையுள்ள லேயாளை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். யூதா என்றால் கர்த்தரையே துதிப்பேன் யூதா கோத்திரத்தில் தான்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறக்கிறார் அதுமாத்திரமல்ல அவள் மூலம் சந்ததிகளும் அதிகமானது கூடுதல் கோத்திர பிதாக்கள் பெற்றெடுத்தவள் லேயாள்.

மேலும் ராகேல் பிள்ளையில்லாததால் சகோதரியின் மேல் பொறாமை கொண்டாள். மட்டுமல்ல தன்  வேலைகாரியாகிய பில்காளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுக்கிறாள். பில்காள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு தாண் என்று பெயரிடுக்கிறாள்.

மேலும் இரண்டாவதாக யாக்கோபுக்கு வேலைக்காரியாகிய பில்காள் இரண்டாவது குமாரனைப் பெற்று அவனுக்கு நப்தலி என்று பெயரிடுகிறாள்.

இதிலிருந்து யாக்கோபிடம் மாம்ச கிரியை இருக்கிறது தெரியவருகிறது.      ஜெபிப்போம்.

                                      கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.

                                                                                                                                                                                                                                                            -தொடர்ச்சி நாளை.