தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 10:16

கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார்; புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்துபோவார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் நியாயவிசாரனையில் நடத்துகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா, எபெனேசர் ஆக மாற வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 7:13-17  

இந்தப்பிரகாரம் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தருக்கு விரோதமாய் இருந்தது.

பெலிஸ்தர் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவக்கிக் காத்மட்டுமுள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர் பெலிஸ்தர் கையிலே இராதபடிக்கு, விடுவித்துக் கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியருக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.

அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம்விசாரித்த பின்பு,

அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது, அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

இந்த தேவனுடைய வார்த்தைகள் என்னவென்றால் நம்முடைய  உள்ளம் எபெனேசராக இருந்தால் தான் பெலிஸ்திய கிரியைகளை ஜெயித்தோம் என்பது விளங்கும்.  அப்படியாக நாம் கர்த்தருக்குள் எப்போதும் நிலைத்திருந்தால் மட்டுமே நம் உள்ளத்தில் பெலிஸ்தியர்கள் செயல்பட முடியாது என்பதும், நம்முடைய வாழ்வில் அந்த கிரியைகளினால் இழந்த ஆசீர்வாதத்தை திரும்ப பெற்றுக்கொண்டு, மீண்டும் அந்த கிரியைகளில் நாம் ஒருபோதும் விழுந்துவிடாதபடி பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.  ஆனால் நம்மில் அநேகர் வாழ்க்கையில் கர்த்தர் நம்மை சோதிக்கும் வேளையில் எளிதில் விழுந்துவிடுகிறார்கள்.  அதென்னவென்றால் நமக்குள் சத்தியம் இல்லை.  சத்திய வசனம் நம்மில் உண்டானால் அதற்குள் இருக்கிற கிறிஸ்துவின் வெளிச்சம் நம்மை எப்போதும் வெளிச்சத்தின் பாதையில் நடத்தும்.  அப்படிதான் இஸ்ரவேலருக்கும், எமோரியருக்கும் அங்கு சமாதானம் வந்தது.  

மேலும் நாமும் நம்முடைய உள்ளம் புறஜாதியிலிருந்து விடுதலையாகுமானால் சமாதானம் கிடைக்கும்.  இப்படியாக சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான் என்பது கர்ததர் நம்மை கிறிஸ்துவினால் நியாயந்தீர்ப்பார் என்பதையும், நம்மை அவருடைய வீடாக மாற்றுவார் என்பதையும், நாம் அவருடைய பலிபீடமாகுவோம் என்பதையும் விளக்கிக்காட்டுகிறார்.  ஆதலால் பிரியமானவர்களே நம்மை அவ்விதம் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.