தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 96:10

கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ராஜா, கர்ததராகிய இயேசு கிறிஸ்து.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் நியாயவிசாரணையில் நடத்துகிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 8: 1-6  

சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.

அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.

ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.

அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து:

இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.

எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் சாமுவேல், தன் முதிர்வயதில் இஸ்ரவேலின் மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.  அவன் மூத்த குமாரன் யோவேல், இளையவன் அபியா; அவர்கள் பெயர்செபாவிலே நியாயாதிபதிகளாக இருந்தார்கள்.  ஆனால் அவன் குமாரர்கள், தங்கள் தகப்பன் வழியில் நடவாமல் பொருளாசைக்கு சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தை புரட்டினார்கள்.   அப்போது இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லாரும் கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து, இதோ நீர் முதிர்வயதுள்ளவராயிருக்கிறீர்,  உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை, ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு , ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், அந்த வர்த்தை சாமுவேலுக்கு தகாததாய் காணப்பட்டது.  அவ்விதம் தகாததாய் காணப்பட்டதால் அவன் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.  

அப்போது கர்த்தர் சாமுவேலிடம் 

1சாமுவேல் 8:7-9  

அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.

நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின்படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள்.

இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகள் பிரகாரம் காரியம் இன்னதாகயிருக்கும் என்று அவர்களுக்கு திடசாட்சியாய் தெரியப்படுத்து என்றார்.  அப்படியே சாமுவேல் கர்த்தருடைய வார்த்தையை தெரியப்படுத்துவது 

1சாமுவேல் 8:11-18 

உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.

ஆயிரம்பேருக்கும் ஐம்பதுபேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.

உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.

உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.

உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான்.

உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.

உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.

நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கேட்ட இஸ்ரவேல் புத்திரர்கள் சாமுவேலின் சொல்லை கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல எங்களுக்கு ஒரு ராஜா இருக்கதான் வேண்டும்; நாங்கள் சகல ஜாதிகளை போல இருப்போம்: எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாக  புறப்பட்டு எங்கள் யுத்தங்களை நடத்த வேண்டும் என்றா்கள்.    அப்போது சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான்.  

அப்போது கர்த்தர் 1சாமுவேல் 8:22  

கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகள் கர்த்தர் எல்லாரையும் தங்கள் தங்கள் ஊர்களுக்கு அனுப்பி விடுகிறார்.  

பிரியமானவர்களே இதன் கருத்துகளை நாம் முதலிலிருந்து சிந்திக்கும் போது நம்முடைய மனசில் இருக்ககிற மனபோராட்டம்.  இந்த போராட்டம் என்னவென்றால் நாம் கர்த்தரின் அன்பை அறிந்தும், அநேக இடங்களில் கர்த்தர் நமக்கு தகுந்த வேளையில் நம்மை தப்புவித்து இரடசித்துக்கொண்டிருக்கும் போது, நம்முடைய ஆத்துமா அதனை மறக்க வைத்து தகாததை சிந்திக்க  வைக்கும்.  அதெப்படியென்றால் கர்த்தருடைய நியமங்களின்படி நடவாமல், நம்மை இரட்சித்த கர்த்தரை மறந்துவிடுகிறோம்.  அதுமட்டுமல்ல கர்த்தர் நமக்காக யுத்தம் செய்து, நம்மை நியாயந்தீர்க்கிறார் என்று தெரிந்தும் அவருடைய பாதையில் நடவாமல், ஏதோ சூழ்நிலைமைகள் வரும் போது கர்த்தரை தேடாமல், மனுஷர்கள் ஆலோசனையை கேட்டு, அவர்களை பின்பற்றி புற ஜாதிகளைபோல் நடந்து கொள்ள துணிவாயிருக்கிறோம்.  

பிரியமானவர்களே இவ்விதம் இருப்பவர்களில் கர்த்தரின் பலிபீடம் இருக்காது, மேலும் அவருடைய வீடாக இருக்கமுடியாது என்பதனையும் எடுத்துகாட்டி, அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவிடுகிறார் என்றால் கானானில் (கிறிஸ்துவில்) பங்கில்லை என்பதனையும் நமக்கு எடுத்து சொல்கிறார். ஆதலால் இதனை வாசிக்கிற பிரியமானவர்களே, இப்படி நம்மை கெடுத்து போடாதபடி கர்த்தரில் மட்டும் நம்பிக்கையாயிருந்து, அவர் நம்முடைய ராஜா, அவர் நமக்காக சத்துருக்களிடம் யுத்தம் செய்து, நம்மை கானானில் பிரவேசிக்க வைத்து, நம்மை அவருடைய வீடாக மாற்றுவார் என்ற நம்பிக்கையோடு அவரிடமாய் மட்டும் திரும்பி ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.