தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நாகூம் 2:1
சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நமமுடைய ஆத்துமா சிதறடிக்காதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை ஆளுகிற ராஜா கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 சாமுவேல் 9:1- 4
பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் புத்திரனாகிய அபீயேலின் குமாரன்.
அவனுக்குச் சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான்; இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.
சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று; ஆகையால் கீஸ் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான்.
அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக் கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை, பென்யமீன் நாட்டை உருவக்கடந்தும் அவைகளைக் காணவில்லை.
மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை நியாயம் விசாரித்து, தங்களுக்கு முன் சென்று யுத்தம் செய்யும்படி ஒரு ராஜா வேண்டும் என்று வேண்டுக்கொண்டபோது, கர்த்தர் சாமுவேல் மூலம் அவர்களுக்கு அந்த காரியம் வேண்டாம் என்று சொன்னபோதும், அவர்கள் கேட்க மனதில்லாமல் மீண்டும் ராஜா வேண்டிக்கொண்டதால்; பென்யமீன் கோத்திரத்தில் கீஸ் என்னும் பேருள்ள மகாபராக்கிரமசாலியான ஒருமனுஷன் இருந்தான். அவன் தகப்பன் சோரோரின் புத்திரனாகிய அபியேலின் குமாரன். அவனுக்கு சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான ஒரு வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான். அல்லாமலும் இஸ்ரவேலில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் யாரும் இல்லை. எப்படியென்றால்; எல்லா ஜனங்களும் அவனுடைய தோளுக்கு கீழாயிருக்கதக்க உயரமுள்ளவனாயிருந்தான். ஆனால் சவுலின் தகப்பனாகிய கீஸுடைய கழுதை காணாமற்போனது, அவன் தகப்பன் அவனிடம் நீ வேலைக்காரரில் ஒருவனைக்கூட்டிக்கொண்டு கழுதையை தேடப்புறப்பட்டு போ என்றான். அவன் அந்தபடியே எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துப்போனான்; அங்கே காணாததால் சாலீம் நாட்டை கடந்தார்கள் அங்கேயும் காணவில்லை; பென்யமீன் நாட்டையும் கடந்தா்கள்; அங்கேயும் காணததால் அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்த போது,
1சாமுவேல் 9:5
அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடிக்குத் திரும்பிப்போவோம் வா என்றான்.
அப்போது அந்த வேலைக்காரன் 1சாமுவேல் 9:6
அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்.
அதற்கு சவுல் 1சாமுவேல் 9:7
அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனுஷனுக்கு என்னத்தைக் கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்துபோயிற்று; தேவனுடைய மனுஷனாகிய அவருக்குக் கொண்டு போகத்தக்க காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான்.
அதற்கு அந்த வேலைக்காரன் 1சாமுவேல் 9:8
அந்த வேலைக்காரன் பின்னும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படிக்கு, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது முற்காலத்தில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞானதிருஷ்காரனிடத்தில் போவோம் வாருங்கள் என்றால் அதற்கு தீர்க்கதரிசியென்று பொருள். ஆனால் வேலைக்காரன் சொன்னதற்கு சவுல் தன் வேலைகாரனை நோக்கி; நல்ல காரியம் சொன்னாய், போவோம் வா என்று அழைத்து, அந்தபடியே தேவனுடைய மனுஷன் இருந்த அந்த பட்டணத்திற்கு போனார்கள்.
பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்டவைகளின் விளக்கம் என்னவெனில், கர்த்தர் சவுலை ராஜாவாக அபிஷேகம் செய்ய போகிறார் என்றும், அவர்கள் எந்த விதத்தில் ஆத்துமாக்களுக்காக திறப்பில் நிற்க வேண்டும் என்று நமக்கு திருஷ்டாந்ததோடு விளக்கி காட்டுகிறார். பிரியமானவர்களே நாம் மேற்க்கூறப்பட்டவைகளை தியானிக்கும் போது, கர்த்தர் சவுலை ராஜவாக்குகிறார் என்பதும், ராஜாவாக அபிஷேகம் பண்ண பட்டவர்கள் எப்படி தங்கள் ஆத்துமா சிதறடிக்கபடாதபடி நம்மை காக்க வேண்டும் என்றும், அல்லாமலும் ஏற்கனவே சிதறப்பட்ட நம்முடைய ஆத்தமா எங்கு கிடத்தப்பட்டிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிப்பதும். பற்பல ஜாதிகளுடைய எண்ணங்களால் உள்ளங்கள் சிதறப்பண்ணியிருக்குமானால் அதனையும் கண்டுபிடித்து கொண்டுவரவேண்டும் என்பதே தேவ சித்தமாயிருக்கிறது. ஆதலால் நாம் தேவ சித்தத்தின் பிரகாரம், நம்முடைய ஆத்துமாவை சிதறதபடி பாதுகாப்போம். ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.