தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 5:2
நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா எழுப்புதல் அடைய வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா சிதறடிக்காதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
மேலும் கர்த்தர் சவுலை ராஜாவாக்கும்படியாக அடையாளமாக சில காரியங்களை செய்கிறார். என்னவெனில் கீஸுடைய கழுதை காணாமற் போனது, சவுல் தேடும்படி புறப்பட்டு போகிறபோது, தேவனுடைய மனுஷன் இருந்த பட்டணத்திற்குள் பிரவேசித்து, அந்த பட்டணத்தின் மேட்டின் வழியாய் ஏறுகிற போது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு ஞான திருஷ்டிகாரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களை கேட்கும் போது, அவர்கள் சொன்னது;அவர்கள் இருக்கிறார்; இதோ உங்களுக்கு எதிரே இருக்கிறார்; தீவிரமாய் போங்கள்; இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியால் இன்றைய தினம் பட்டணத்திற்கு வந்தார்.
ஆனால் பிரியமானவர்களே, இந்த வார்த்தைகள், கர்த்தராகிய இயேசுவை தேவன் ராஜாவாகவும், தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும் செய்கிறார் என்பதனை திருஷ்டாந்தபடுத்தி நமக்கு சாமுவேலையும், சவுலை வைத்துக்காட்டுகிறார். இவைகள் எல்லாம் நம் உள்ளத்தில் வருகிற எழுப்புதல்கள் என்பதனை உணர்ந்துக்கொண்டு நம்மையும் அவ்விதமே ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.