தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி  3:20

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்து போஜனம் பண்ணுகிற போஜனபீடமாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா எழுப்புதல் அடையவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 9:13-16  

நீங்கள் பட்டணத்திற்குள் பிரவேசித்தவுடனே, அவர் மேடையின்மேல் போஜனம் பண்ணப்போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வருமட்டும் ஜனங்கள் போஜனம் பண்ணமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் போஜனம் பண்ணுவார்கள்; உடனே போங்கள்; இந்நேரத்திலே அவரைக் கண்டுகொள்ளலாம் என்றார்கள்.

அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டு வந்தான்.

சவுல் வர ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காதுகேட்க:

நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.

மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை தியானிக்குத் போது, சாமுவேலைக் குறித்து நீங்கள் பட்டணத்திற்குள் பிரவேசித்தவுடனே, அவர் மேடையின் மேல் போஜனம் பண்ண போகுமுன்னே அவரை காண்பீர்கள், அவர் வருமட்டும் ஜனங்கள் போஜனம் பண்ணமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார், பின்பு அழைக்கப்பட்டவர்கள் போஜனம் பண்ணுவார்கள்; உடனே போங்கள்; இந்நேரத்தில் அவரை கண்டு கொள்ளலாம் என்றார்கள்.  அவர்கள் பட்டணத்திற்கு போய், பட்டணத்திற்குள் சேர்ந்த போது, சாமுவேல் மேடையின் மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டு வந்தான்.  

சவுல் வர ஒரு நாளுக்கு முன்னே, கர்த்தர் சாமுவேலின் காதுகள் கேட்க 

1சாமுவேல் 9:16 

நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.

மேற்கூறப்பட்ட வசனத்தில் சவுல் பென்யமீன் நாட்டான் என்றும்,  அவனை கர்த்தர் இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணபோகிறார் என்றும்,  சவுல் இஸ்ரவேலை பெலிஸ்தரின் கையிலிருந்து விடுவித்து இரட்சிப்பான் என்றும், மேலும் இஸ்ரவேலர் இட்ட முறையிடுதல் கர்த்தரின் சமூகத்தில் எட்டினதால் அவர்களை கடாட்சித்தார் என்பதும் தெரிகிறது.  

பிரியமானவர்களே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் போஜனபீடம் வைக்கிறார் என்பதும், அவர் நம்மோடு போஜனம் பண்ணுவார் என்பதும், நாம் அவரோடுகூட போஜனம் பண்ணுகிறவர்களானால், நாம் செலுத்துகிற பலியை அவர் ஆசீர்வதிப்பார் என்பதும் நம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணி, நம்மை பெலிஸ்தியருடைய கையிலிருந்து விடுவிக்கிறார்.  ஆகையால் நாம் தியானித்த கருத்துக்கள் பிரகாரம் நம் ஆத்துமாவை கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.