தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1கொரிந்தியர் 14:1
அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா தீர்க்கதரிசனம் உள்ளதாக காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா, கிறிஸ்து போஜனம் பண்ணுகிற போஜனபீடமாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
இந்த நாளில் நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 9:14-20
அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டு வந்தான்.
சவுல் வர ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காதுகேட்க:
நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.
சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார்.
சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான்.
சாமுவேல் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: ஞானதிஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன்.
மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான்.
மேற்கூறப்பட்டவைகளை நாம் தியானிக்கும் போது, தந்தையின் கழுதைகளை தேட போன சவுல் வருவதற்கு ஒரு நாளைக்கு முன்னே கர்த்தர் சாமுவேலிடம், சவுலின் காரியங்களைக்குறித்து வெளிப்படுத்தியிருந்தார். பின்பு சாமுவேல் சவுலைக்கண்ட போது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ; இவன்தான் நான் சொல்லியிருந்தவன் என்று சொல்லி, இவன் என் ஜனத்தை ஆளுவான் என்றார். ஆனால் சவுலுக்கு சாமுவலை தெரியாததால் அவன் நடுவாசலிலே சமுவேலினிடத்தில் வந்து: ஞான திருஷ்டிகாரன் வீடு எங்கே என்று கேட்க, சாமுவேல் சவுலுக்கு பிரதியுத்தரவாக நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின் மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம் பண்ண வேண்டும்; நாளை காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாம் உனக்கு அறிவித்து உன்னை அனுப்பி விடுவேன்.
ஆனால் 1சாமுவேல் 9:20
மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கர்த்தர் சாமுவேலைக் கொண்டு சவுலிடம் சொல்லும் போது சவுல் பிரதியுத்தரவாக
1சாமுவேல் 9:21
அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளினால் அவன் தன்னை தாழ்த்துகிறதை பார்க்கிறோம். அல்லாமலும் பிரியமானவர்களே தீர்க்கதரிசியை வைத்து கர்த்தர் சவுலை ராஜாவாக்க போகிறார் என்பதனை குறித்து பேசுகிறார். இதென்னவெனில் கிறிஸ்து தீர்க்கதரிசியாக நம் உள்ளில் வெளிப்பட்டு , தேவனுடைய வார்த்தைகளால் நம்மிடத்தில் பேசுவார் என்பதும், அவரே ராஜாவாக தேவனுடைய சிங்காசனத்தில் வலது பாரிசத்தில் வீற்றிருந்து, நம்மையும் ராஜரீக அபிஷேகத்தால் ஆசீர்வதித்து அவரோடே சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் உட்காரும்படி அருள் செய்வார் என்பதன் திருஷ்டாந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆதலால் அன்பானவர்களே நாம் அவரோடே போஜனம் பண்ணினால் மட்டுமே அவருடைய வார்த்தையால் நம்மோடு பேசுவார் இவ்விதமாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.