தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 132:14
இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரில் தரித்திருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா தீர்க்கதரிசனம் உள்ளதாக காணப்படவேண்டும் என்பதை குறித்து கர்த்தராகிய இயேசுவுக்கு திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 9:21-27
அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.
சாமுவேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் போஜனசாலைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பதுபேராயிருந்தார்கள்.
பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன் கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான்.
அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டுவந்து, அதை சவுலுக்குமுன் வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்ததுமுதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடே சாப்பிட்டான்.
அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவன் மேல்வீட்டிலே சவுலோடே பேசிக்கொண்டிருந்தான்.
அவர்கள் அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படிக்கு ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள்.
அவர்கள் பட்டணத்தின் கடைசி மட்டும் இறங்கி வந்த போது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்து போனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே தரித்துநில் என்றான்.
மேற்க்கூறிய வார்த்தைகளை தியானிக்கும் போது சாமுவேல் சவுலையும், அவன் வேலைக்காரனையும் அவனுடைய போஜனசாலைக்குள் அழைத்துக்கொண்டு போய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்தில் வைத்தான். ஆனால் அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பது பேராயிருந்தார்கள். பின்பு சாமுவேல் சமையற்காரனை பார்த்து நான் உன் கையிலே கொடுத்து வைத்த பங்கை, கொண்டு வந்து வை என்று சொல்ல; சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து, அதை சவுலுக்கு முன் வைத்தான்; அப்போது சாமுவேல்; சவுலிடம் இதோ; இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்து சாப்பிடு. நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்தது முதல் இது உனக்காக வைக்கப்ட்டிருந்தது என்று சொன்னான். அன்றைய தினம் சவுல் சாமுவேலோடே சாப்பிட்டான்.. பின்பு அவர்கள் மேடையிலிருந்து இறங்கி வந்து சவுலோடே பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் அதிகாலையிலே கிழக்கு வெளுக்கிற நேரத்தில், சாமுவேல் சவுலை மேல் வீட்டில் அழைத்து; நான் உன்னை அனுப்பிவிடும்படி ஆயத்தப்படு என்ற போது அவன் ஆயத்தப்பட்டான்; இருவருமாக வெளியே புறப்பட்டார்கள். ஆனால் அவர்கள் பட்டணத்தின் கடைசி மட்டும் இறங்கி வந்த போது, சாமுவேல் சவலை பார்த்து; வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்து போக பண்ணு. அவன் அப்படியே நடந்து போனபோது, சாமுவேல் சவுலிடம், நான் தேவனுடைய வார்த்தையை உனக்கு தெரிவிக்கும்படி சற்றே தரித்து நில் என்றான்.
பிரியமானவர்களே, இங்கு நாம் தியானிககும் போது கர்த்தர் சாமுவேலை வைத்து சவுலை ராஜாவாக்கி, முதல் ஸ்தானத்தை கொடுக்கும் படியாக முன்னந்தொடை பந்தியில் அவனுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. அப்படியே அவர்கள் பந்தியில் புசிக்கிறதை பார்க்கிறோம். அல்லாமலும் மேல் வீட்டில் அழைத்து சென்று ஆயத்தபடு என்று சொல்வதும், அந்த மேல்வீடு, கிறிஸ்துவின் சபைக்கு திருஷ்டாந்தமும், மேலும் நாம் கிறிஸ்துவோடு தரித்திருந்தால், கர்த்தர் நம்முடைய வாழ்வில் செய்வதனை குறித்து பேசுவார் என்பதும் புரிகிறது. இவ்விதமாக கர்த்தரிடத்திலிருந்து நல்ல பங்கை பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.