தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 20:6
கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மில், கிறிஸ்து இஸ்ரவேலை பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கும்படியாக கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரில் தரித்திருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 10:1-7
அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்பண்ணினார் அல்லவா?
நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள்.
நீ அவ்விடத்தை விட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியில் சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டுவந்து,
உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும்.
பின்பு பெலிஸ்தரின் தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கிவருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும் மேளமும் நாகசுரமும் சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.
அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய்.
இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளின் கருத்துக்கள் என்னவெனில், சாமுவேல் சவுலை தைலகுப்பியினால் தலையின் மேல் அபிஷேகம் பண்ணி, சொன்னது கர்த்தர் இன்று உன்னை தலைவனாக அபிஷேகம் பண்ணினார். ஆதலால் நீ இன்றைக்கு என்னை விட்டு போகிற போது பென்யமீன் எல்லையாகிய செல்சாகில், ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரை காண்பாய்; அவர்கள் உன்னை பார்த்தவுடனே, நீ தேட போன கழுதைகள் அகப்பட்டது: இதோ உன் தகப்பன் கழுதைகளின் மேலிருந்த கவலைகளை விட்டு உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்ன என்ன செய்வேன் என்கிறான் என்று சொல்லுவார்கள். பின்பு அவ்விடம் விட்டு போகும்போது, தாபோரிலுள்ள சமபூமியில் சேரும் போது, தேவனை பணியும்படி பெத்தேலுக்கு போகிற மூன்று மனிதர் சந்தித்து ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்ச ரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டு வந்து ணு செய்தியை விசாரித்து இரண்டு அப்பங்களை கொடுப்பார்கள். பின்பு பெலிஸ்தரின் தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்கு போய், அங்கே பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கி வருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்படுவாய்; அவர்களுக்கு முன்பாக தம்புருவும் மேளவும் நாகசுரவும் சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். பின்பு கர்த்தருடைய ஆவியானவர் உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடே கூட தீர்க்கதரிசனம் சொல்லி வேறு மனுஷனாவாய். இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும் போது, சமயத்துக்கு ஏற்றபடி, நீ செய்: தேவன் உன்னோடே இருக்கிறார்.
பிரியமானவர்களே கர்த்தர் இஸ்ரவேலை, பெலிஸ்தலின் கையிலிருந்து விடுவித்து இரட்சிக்கிம் படியாக விசாரபட்டுக்கொண்டு இருக்கிறார் என்பதையும், அதற்காக கர்த்தராகிய இயேசுவை நம்மில் அபிஷேகம்பண்ணி எல்லாவற்றிற்கும் தலைவராக நியமிக்கிறார் என்பதற்கு சவுலை ராஜாவாக அபிஷேகம் பண்ணி திருஷ்டாந்தபடுத்தியிருக்கிறார் என்பதும், கர்த்தர் தம்முடைய வார்த்தைகளால் கிறிஸதுவில் இறங்குகிறார் என்பதும், அவர் இறங்கி வரும் போது உள்ள அடையாளங்களாகிய சத்தங்களும் திருஷ்டாந்தப்படுத்தபட்டிருக்கிறது. அல்லாமலும் கர்த்தர் இவ்வித தீர்க்கதரிசனம் உரைக்கிறார் என்பதும், கர்த்தர் நம்மோடு இருக்கிறார். ஆதலால் பிரியமானவர்களே கர்த்தரோடு கூட இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.