தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 32: 8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபை ஏழுநாள் கர்த்தரின் பாதத்தில் காத்திருக்குதல்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்து பெலிஸ்தியரின் கையிலிருந்து இஸ்ரவேலரை விடுவித்து இரட்சிக்கும்படியாக கர்த்தரால் அபிஷேகம் பண்ணபடுகிறார்.
அல்லாமலும் அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்
1 சாமுவேல் 10:8
நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் சாமுவேல், சவுலிடம், நீ எனக்கு முன்பு கில்காலுக்கு இறங்கி போ, சர்வாங்க தகனபலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தும்படிக்கு நான் உன்னிடத்திற்கு வருவேன். உன்னிடத்திற்கு வந்து நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்குமளவும் ஏழு நாள் காத்திரு என்றான்.
பிரியமானவர்களே கர்த்தர் நமக்கு அறிவிக்க வேண்டிய காரியங்கள் அறிவிக்க வேண்டுமானால் ஏழு நாள் அவருடைய பாதத்தில் காத்திருக்க வேண்டும். இவ்விதம் நாமும் காத்திருந்து ஆலோசனையை பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.