தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவேல்:2:28 

அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் வேறு இருதயம் தருகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டிசபையாகிய நாம் ஏழுநாள் கர்த்தரின் பாதத்தில் காத்திருப்போமானால், நாம் நடக்க வேண்டிய விதத்தை நமக்கு அறிவிப்பார் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 10:8-11 

நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான்.

அவன் சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது.

அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.

அதற்குமுன்னே அவனை அறிந்தவர்கள் எல்லாரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது: கீசின் குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

மேற்கூறப்பட்ட  வசனங்களை தியானிக்கும் போது சவுல் சாமுவேலை விட்டு புறப்படும் போது தேவன்  அவனுக்கு வேறு இருதயத்தை கொடுத்தார், அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றைய தினம் ஏற்ப்பட்டது.  அவர்கள் அந்த மலைக்கு வந்த போது, இதோ தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்போது தேவனுடைய ஆவி அவன்  மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.  சவுல் தீர்க்கத்தரிசனம் சொல்வதை கேட்ட ஜனங்கள், அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் எல்லாரும், இவன் கீசின் குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.  

இதனை போல் பிரியமானவர்களே நாம் கர்த்தருக்காய் காத்திருக்கும் போது, கர்த்தருடைய ஆவியானவர் நம்மேல் இறங்குவார் என்பதும் நாம் செய்ய வேண்டிய காரியங்களை ஒரே நாளிலும் செய்வார் என்பதும், ஆனால் கர்த்தரின் ஆவி நம்மேல் இறங்குவதால், நம்மில் வருகிற மாற்றங்களால், நம்மை முன் அறிந்தவர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்பதும் புரிகிறது.  இவையெல்லாம் நடக்கிறதன் காரணம் என்னவென்றல், கர்த்தருக்கு காத்திருக்குதல் வேறு இருதயத்தை நமக்குதருகிறார். ஆதலால்  கர்த்தருக்குபிரியமாய் நடந்துக்கொ்ண்டால், அவர் நம்மில் ஒரே நாளில் மகிமைப்படுவார் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.