தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 138: 7 

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் எல்லாவிதத்திலும் இரட்சிக்கிறவர்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவை கர்த்தரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்போம் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 10:23-27 

அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.

அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்துகொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.

சாமுவேல் ராஜாங்கத்தின் முறையை ஜனங்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, ஜனங்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.

சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதை ஏவினாரோ, அவர்களும் அவனோடேகூடப் போனார்கள்.

ஆனாலும் பேலியாளின் மக்கள்: இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டு வராமல் அவனை அசட்டைபண்ணினார்கள்; அவனோ காதுகேளாதவன் போல இருந்தான்.

மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது சவுலை கர்த்தர் சாமுவேலை வைத்து அழைத்து, இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கும் படியாக பார்க்கும்போது, அவன் தளவாடங்களிலிருக்கிற இடத்தில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார்.  பின்பு அவர்கள் ஓடி,  அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.  ஆனால் அவன் ஜனங்கள் நடுவே நின்ற போது, அவன் எல்லா ஜனங்களை விட உயரமுள்ளவனாயிருந்தான். சவுலை கர்த்தர் ராஜாவாக்கினார் என்று சாமுவேல் ஜனங்களை பார்த்துச் சொல்ல, ஜனங்களெல்லாரும் ஆர்ப்பரித்து ராஜா வாழ்க என்று வாழ்த்தினார்கள்.  பின்பு சாமுவேல் ராஜாங்கத்தின் முறையை தெருவித்து, ஒரு புஸ்தகத்தில் எழுதி, கர்த்தருடைய சந்நிதியில் வைத்து ஜனங்களை எல்லாம் அவரவர் வீட்டிற்கு அனுப்பி விடுகிறான்.  சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டிற்கு  போனான்.  ஆனால் இராணுவத்தில் கர்த்தர் எவர்கள் மனதை ஏவினாரோ, அவர்களும் அவனோடேக்கூடப் போனார்கள்.  ஆனால் பேலியாளின் மக்கள் இவனா நம்மை இரட்சிக்கப்போகிறவன்  என்று சொல்லி, அவனுக்கு காணிக்கைக்கொண்டுவராமல் அவனை அசட்டைப் பண்ணிரார்கள்.  ஆனால் சவுலோ காது கேளாதவன் போலு இருந்தான்.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வார்த்தைகள் என்னவென்றால் நாமும் உலகத்தின் பின்னால் ஒளித்து இருந்தபோது கர்த்தர் நம்மையும்  அவரண்டையில் அழைத்து அபிஷேகித்து, நம்மை ஆசீர்வதித்து கொண்டிருக்கையில், நாம் அதனை நிர்விசாரப்படுத்தி ஆத்மீக வாழ்க்கை என்று பயமில்லாமல் வாழ்கிறோம்.  ஆதலால் பேலியாளின் மக்களாகிய பிசாசின் கிரியை உள்ளவர்கள் நம்மை பரிகாசம் பண்ணுகிறார்கள், எப்படியென்றால் இவனா ரட்சிக்கப்போகிறவன் என்று கூறிகிறார்கள்.  ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துப்பேசி நம்மை இரட்சிக்கிறவர் என்று நாம் அறிந்து கொள்கிறோம்.  மனுஷனால் கூடாதது தேவனால் எல்லாம் கூடும் என்பதனை உணர்ந்து நாம் கர்த்தரின் சந்நிதியில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.