தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 138: 8
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்மீக கண்கள் இழந்து போகாதபடி பாதுகாக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் எல்லாவிதத்திலும் இரட்சிக்கிறவர் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 சாமுவேல் 11:1-2
அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.
அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தைவரப்பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான்.
மேற்கூறிய வசனங்களில் கர்த்தர் சவுலை இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணின பின்பு, நாகாஸ் என்னும் அம்மோனியன் கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றுகைப் போட்டான். அப்போது யாபேசின் மனுஷர் நாகாஸை நோக்கி, நீர் எங்களோடே உடன்படிக்கை பண்ணும், அப்போது உம்மை சேவிப்போம் என்றார்கள். அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ் சொன்னது, நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணை பிடுங்கி; இஸ்ரவேல் எல்லாவற்றின் மேலும் நிந்தை வரபண்ணுவதே, நான் உங்களோடே பண்ணும் உடன் படிக்கை என்றான்.
அதற்கு யாபேசின் மூப்பர்கள் 1சாமுவேல் 11:3-5
அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழுநாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை ரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.
அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காதுகேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.
இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி எங்களுக்கு ஏழு நாள் தவணைக்கொடும், எங்களை ரட்சிப்பார் இல்லாவிட்டால், நாங்கள் உம்மிடத்தில் வருவோம் என்றார்கள். அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காது கேட்க நாகாஸ் சொன்ன காரியத்தை அறிவித்தவுடன், ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள். சவுல் இந்த செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன் மேல் இறங்கினதினால் சவுல் மிகவும் கோபம் மூண்டவனாகி
1சாமுவேல் 11:7
ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகள் கேட்டதினால் கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின் மேல் வந்ததினால், ஒருமனப்பட்டு புறப்பட்டு வந்தார்கள்.
பிரியமானவர்களே இவ்விதமாக கர்த்தர் திருஷ்டாந்தபடுத்துவது என்னவென்றால், அம்மோனியன் இஸ்ரவேலருக்குள் செயல்பட்டால், நம்முடைய ஆத்மீக கண்ணைப் பிடுங்குகிறான். நம்முடைய ஆத்மீக கண்கள் இழந்து போகாதபடி, நாம் ஒருமனதோடு சபைகூடி தேவனை ஆராதிக்கும் போது, கர்த்தர் இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணுவார். ஆதலால் நம்முடைய ஆத்மீக கண்கள் இழந்து போகாதபடி பாதுகாக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.