தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 11:27
நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு பிரயோஜனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்மீக கண்கள் அம்மோனிய கிரியைகளால் நஷ்டம் அடையாதபடி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அவ்விதம் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரவேலராகிய நாம் சபைகூடி ஒருமனதோடுஆராதிக்க வேண்டும்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 சாமுவேல் 11:8-10
அவர்களைப் பேசேக்கிலே இலக்கம் பார்த்தான்; இஸ்ரவேல் புத்திரரில் மூன்று லட்சம்பேரும், யூதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள்.
வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு ரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.
மேறக்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் சவுல் இஸ்ரவேலுக்கு ராஜாவாக இருக்கும்போது ஜனங்களுக்கு சொல்லி அனுப்பின வார்த்தைகளால் இஸ்ரவேலரில் மூன்று லட்சம் பேரும், யூதமனுஷரில் முப்பதினாயிரம் பேரும் ஒருமனபட்டு பேசேக்கிலே கூடி வந்தார்கள். ஆனால அங்கு வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி, நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு இரட்சிப்பு கிடைக்குமென்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்கு சொல்லுங்கள் என்றார்கள். அதனை யாபேசின் மனுஷர் கேட்டப்பொழுது சந்தோஷப்பட்டார்கள். பினபு யாபேசின் மனுஷர் சொன்னது; நாளைக்கு உங்களிடத்திற்கு வருவோம், உங்கள் இஷ்டபடியெல்லாம் எங்களுக்கு செய்யுங்கள் என்றார்கள் மறு நாளிலே
1சாமுவேல் 11:11
மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப்போனார்கள்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களில், சவுல் அம்மோனியரை முறியடித்ததினால், இஸ்ரவேல் ஜனங்கள் சாமுவேலை நோக்கி, சவுலா எங்களுக்கு ராஜாவாக போகிறவன் என்று சொன்னவர்கள் யார்?அவர்களை நாங்கள் கொன்று போடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள். அதற்கு சாமுவேல் இன்றைய தினம் யாரும் கொல்லப்படாது. ஆனால் சாமுவேல் ஜனங்களிடம் நாம் கில்காலுக்கு போய் ராஜ்யத்தை ஸ்திரபடுத்துவோம் என்றார்கள். அப்படியே அவர்கள் கில்காலுக்கு போய் கர்த்தருடைய சந்நிதியிலே சவுலை ராஜாவாக ஏற்ப்படுத்தி அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளை செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷம் கொண்டாடினார்கள்.
ஆதலால் பிரியமானவர்களே சவுல் இஸ்ரவேலருக்காக அம்மோனியரை முறியடித்ததால், அவர்கள் அவன் ராஜாவானதிற்காக சந்தோஷப்பட்டார்கள். அதுபோல நாம் கர்த்தருக்கு பிரயோஜனமுள்ளவர்களாக இருந்தால், நம்மில் அவர் சந்தோஷப்படுவார். நாமும் கர்த்தருக்கு பிரயோஜனமுள்ளவர்களாக இருக்கும் படியாக கர்த்தரிடத்தில் ஒப்புவிப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.