தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 1:16
உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம், கிறிஸ்துவுகேற்ற நற்சாட்சி உடையவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு பிரயோஜனமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். என்னவெனில் சவுல் அம்மோனியரை முறியடித்ததால், கர்த்தர் சாமுவேலைக் கொண்டு இஸ்ரவேலருக்கு முன்பாக இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினார். முதலில் ஜனங்கள் சவுல் அம்மோனியரை முறியடித்ததினால், அவன் மேல் பிரியமாயிருந்தார்கள்.
அடுத்தபடியாக தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 12:1- 3
அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன்.
இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவருகிறார்; நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்; நான் என் சிறுவயதுமுதல் இந்நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவந்தேன்.
இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.
மேறக்கூறப்பட்ட வார்த்தைகள் சாமுவேல் ஜனங்களிடம் நங்கள் சொன்னபடியெல்லாம் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்ப்படுத்தினேன். இப்போதும் ராஜாவானவர் சஞ்சரித்து வருகிறார். நானோ நரைத்தவனும், கிழவனுமாயிருக்கிறேன். என் குமாரர் உங்களோடிருப்பார்கள். நான் என் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாக சஞ்சரித்து வந்தேன்; இதோ இருக்கிறேன் கர்த்தரின் சந்நிதியிலும், அவர் அபிஷேம் பண்ணினவருக்கு முன்பாகவும் என்னை குறித்து சாட்சி சொல்லுங்கள். சாமுவேல் சொன்னது யாருடைய எருதையாகிலும், கழுதையாகிலும், யாருக்கு அநியாயம் செய்தாலும், யாருக்கு இடுக்கண் செய்தாலும், யாருடைய கையில் பரிதானம் வாங்கியிருந்தாலும், யாருக்கு கண்சாடையாயிருந்தேனோ, அதனை எனக்கு சொல்லுங்கள், அதனை திரும்ப கொடுப்பேன் என்றான்.
அதற்கு அவர்கள்
1சாமுவேல் 12:4-5
அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள்.
அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார்; அவர் அபிஷேகம்பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சி தான் என்றார்கள்.
மேற்க்கூறிய வார்த்தைகளினால் ஜனங்கள் சாமுவேலிடம் சொல்ல, சாமுவேல் நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்கு, கர்த்தர் உங்களுக்கு எதிராக சாட்சியிருக்கிறார்; அவர் அபிஷேகம் பண்ணினவரும் இன்று அதற்கு சாட்சி என்றான்;அதற்கு அவர்கள்; அவர் தான் சாட்சி என்றார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறியவைகளின் கருத்து என்னவெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குள் எவ்வளவு உண்மையுள்ளவராக தீர்க்கதரிசியாகவும், ராஜாவாகவும் வெளிப்படுவார் என்பதனை கர்த்தர் சாமுவேலையும் சவலை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆதலால் பிரியமானவர்களே நாமும் அவர் கூறிய கருத்துக்களின் படியாக வாழும்படி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.