தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 80:7

சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும், கர்த்தர் செய்த நன்மைகளை மறந்து விடக்கூடாது.வாட்டி சபையாகிய நாம் ஒருபோதும், கர்த்தர் செய்த நன்மைகளை மறந்து விடக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவுக்கேற்ற நற்சாட்சி உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்  

1சாமுவேல் 12: 6 - 8  

அப்புறம் சாமுவேல் ஜனங்களை நோக்கி: மோசேயையும் ஆரோனையும் ஏற்படுத்தினவரும், உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் கர்த்தரே.

இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.

யாக்கோபு எகிப்திலே போயிருக்கும்போது, உங்கள் பிதாக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள், அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் அனுப்பினார்; அவர்கள் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணினார்கள்.

மேற்கூறிய வசனங்களில் நாம் தியானிக்கையில் சாமுவேல் ஜனங்களிடம் சொன்னது என்னவென்றால் கர்த்தர் மோசேயும், ஆரோனையும் கொண்டு இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து புறப்படபண்ணினவரும் கர்த்தரே என்பதும், இப்போதும் கர்த்தர் உங்களுக்கும், உங்கள் பிதாக்களுக்கும் செய்து வந்த எல்லா நீதியான கிரியைகளைக் குறித்தும்  நான் கர்த்தரின் சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படி நில்லுங்கள். பின்பு சாமுவேல் சொன்னது, யாக்கோபு எகிப்திலே போயிருக்கும் போது, உங்கள் பிதாக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்ட போது   கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்து வந்து அவர்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணினார்கள். 

அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து போகிற போது 

1 சாமுவேல் 12:9 

அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் சேனாபதியாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தரின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளினால் கர்த்தர் இஸ்ரவேல் புத்திரை ஆத்சோரின் சேனாபதியாபிய சிசெராவின் கையிலும் பெலிஸ்தரின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள். ஆகையால் அவர்கள் 

1சாமுவேல்12:10 

ஆகையால் அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: நாங்கள் கர்த்தரை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் சேவித்ததினாலே, பாவஞ்செய்தோம்; இப்பொழுது எங்கள் சத்துருக்களின் கைக்கு எங்களை நீங்கலாக்கி ரட்சியும்; இனி உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

மேற்கூறப்பட்டவைகளின் பிரகாரம் கர்த்தரின் சந்நதியில் ஒப்புக்கொடுத்தார்கள்.  

பிரியமானவர்களே நாமும் சத்தியத்தை விட்டு வழி விலகி கர்த்தர் செய்த நன்மைகளை மறந்து தகாத காரியங்களை செய்ததினால் கர்த்தர் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுப்பார்.  மீண்டும் நாம் கர்த்தரிடத்தில் முறையிடுவோமானால் நம்மை எல்லா இக்கட்டுகளிலிருந்தும்  விடுவித்து இரட்சிப்பார்.  ஆதலால் பிரியமானவர்களே நாம் கர்த்தர் செய்த நன்மைகளை ஒருபோதும்  மறந்துவிடக்கூடாது.  இவ்விதம் நாம் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.