தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீநம் 140:7,8

ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.

கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா.)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை, கர்த்தர் நம்மை சூழ்ந்து இருக்கிற எல்லா சத்துருவின் கைக்கு நீஙகாக்கி இரட்சிக்கிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் ஒரு போதும் கர்த்தர் செய்த நன்மைகளை மறந்து விடக்கூடாது என்பதனை குறித்து தியானித்தோம்.  அப்படி நாம் மறந்து விடுவோமானால் கர்த்தர் நம்மை யுத்தத்திற்காக சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கிறார் என்பதனை திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 12: 9 – 11

அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் சேனாபதியாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தரின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்.

ஆகையால் அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: நாங்கள் கர்த்தரை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் சேவித்ததினாலே, பாவஞ்செய்தோம்; இப்பொழுது எங்கள் சத்துருக்களின் கைக்கு எங்களை நீங்கலாக்கி ரட்சியும்; இனி உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

அப்பொழுது கர்த்தர் எருபாகாலையும் பேதானையும் யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்தார்.

மேற்கூறிய வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் அவ்விதம் செய்ததால் அவர்களை சிசெராவின் கையிலும், பெலிஸ்தரின் கையிலும் மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போடுகிறார்.  அவ்விநம் அங்கு அவர்கள் யுத்தம் செய்யும்போது இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி தாங்கள் செய்த தப்பிதங்களை கர்த்தரிடத்தில் முறையிடுகிறார்கள்.  அவர்கள் நாங்கள் பாவஞ்செய்தோம், இப்போதும் எங்களை சத்துருவின் கையிலிருந்து நீங்கலாக்கி இரட்சியும், இனி உம்மை சேவிப்போம் என்றார்கள்.  அப்போது கர்த்தர் எருபாகாலையும், பேதானையும், யெப்தாவையும் சாமுவேலையும்  அனுப்பி நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்கு சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.  

பிரியமானவர்களே இந்த சத்துருக்கள்,  நம் உள்ளத்தில் உண்மையாக நடந்து கொள்ளவிடாதபடி, பல பொல்லாத எண்ணங்களை எழுப்புகிற சத்துருக்கள் ,நம்மை தேவனோடு ஐக்கியமாக பரிசுத்த வாழ்க்கைக்கு விரோதமாக கிரியை செய்கிற சத்துருக்களுக்கு தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார்.என்னவெனில்  நம் குறைகளை  கர்த்தரின் சந்நிதியில் அறிக்கை செய்தால்,அப்படிப்பட்ட சத்துருவின் கையிலிருந்து நம்மைவிடுதலையாக்கி இரட்சிக்கிறார். ஆதலால் எல்லாவித சத்துருவின் கையிலிருந்து விடுவிககும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.