தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 14:27 

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை ஆளுகிறவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவை, நம்மை சூழ்ந்திருக்கிற சத்துருவின் கையிலிருந்து கர்த்தர் நம்மை விடுவித்து இரட்சிக்கிறார் என்பதனை குறித்து நாம் தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 12:12-14 

அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்.

இப்போதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, கர்த்தர் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார்.

நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.

சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரிடம் சொன்னது, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாக வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி எங்களுக்கு ஒரு ராஜா எங்கள் மேல் ஆளவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் நீங்கள் தெரிந்துக்கொண்ட ராஜா இதோ இருக்கிறார்; கர்த்தர் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார்.  நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாக கலகம் பண்ணாமல், கர்த்தருக்கு பயந்து, அவரையே சேவித்து அவருடைய சத்தத்திற்கு கீழ்படிந்து நடந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும், உங்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள். 

ஆனால் கீழ்படியாமல் இருப்பீர்களானால் 

1சாமுவேல் 12:15 

நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்ததுபோல உங்களுக்கும் விரோதமாயிருக்கும்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகள் கர்த்தருடைய கை பிதாக்களுக்கு விரோதமாயிருந்தது போல உங்களுக்கு விரோதமாயிருக்கும் என்றான்.  பிரியமானவர்களே நாம் ஒருபோதும் மனுஷன் நம்மை ஆளும்படி உள்ளத்தில் இடங்கொடுக்கக்கூடாது.  ஏனென்றால் கர்த்தரே நம்முடைய ராஜா; அவரே நம்மை ஆளுகை செய்ய வேண்டும்.  அப்படியானால் நம் உள்ளத்தில் சமாதானம் கிடைக்கும்.  அந்த சமாதானம், உலகம் கொடுக்கிற பிரகாரம் அல்ல; கர்த்தரே நம்முடைய தேவன்; அவரே நம்மை ஆளுகை செய்கிறவரும் அவரே.  அவருக்கே நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.