தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 71: 16
கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடய வசனத்தால் பெலிஸ்திய கிரியையை அழிக்க வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நாம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும் அன்பு கூர வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். ஏனென்றால் அவர் மட்டும் நம்முடைய வாழ்வில் ராஜாதி ராஜாவாக இருக்கவேண்டும் என்பதின் கருத்தை குறித்து திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.
அல்லாமலும் நாம் அடுத்ததாக தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 13:1- 3
சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது,
இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடேகூட மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், ஆயிரம்பேர் யோனத்தானோடேகூடப் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற ஜனங்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான்.
யோனத்தான் கேபாவிலே தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தான்; பெலிஸ்தர் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர் கேட்கக்கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான்.
மேற்கூறப்படுகிற வார்த்தைகளை நாம் தியனிக்கும் போது சவுலை கர்த்தர் இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினதால் சவுல் ராஜ்யபாரம் பண்ணி ஒரு வருஷமாய், பின்பு இரண்டாம் வருஷம் இஸ்ரவேலை அரசாண்ட போது, இஸ்ரவேலில் மூவாயிரம் பேரை தனக்கு தெரிந்துக்கொண்டான். ஆனால் அதில் இரண்டாயிரம் பேர் சவுலோடேக்கூட மிக்மாசிலும், பெத்தேல் மலையிலும், ஆயிரம் பேர் யோனத்தானோடேக்கூட பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள். மற்ற ஜனங்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பி விட்டான். ஆனால் யோனத்தான் கேபாவிலே தாணயம் இருந்த பெலிஸ்தியரை முறியடித்தான். பெலிஸ்தியர் அதைகேள்விப்பட்டார்கள். ஆகையினால் இதை எபிரெயர் கேட்க கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான்.
பிரியமானவர்களே பெலிஸ்திய கிரியைகளை நம் உள்ளத்திலிருந்து அழிக்க வேண்டுமானால் நம் உள்ளத்தில் தேவ வசனம் வெளிப்பட வேணடும், அதனைத்தான் திருஷ்டாந்தத்தோடு சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான் என்று சொல்லப்படுகிறது. ஆதலால் நாம் எப்போதும் கர்த்தருடைய வசனம் காத்துக் கொண்டால் பெலிஸ்தியர் அழிக்கபட்டு நாம் கிறிஸ்துவின் ஆவியில் வளரமுடியும் இவ்விதமாக ஒப்புக் கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.