தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 119: 15
உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருடைய கட்டளையை மீறி, எந்த காரணத்தையும் சொல்ல முடியாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய வசனத்தால் பெலிஸ்திய கிரியைகளை அழிக்கிறவர்களாக இருக்க வேண்டும். இதனை கர்த்தர் சவுலை வைத்து செய்கிறார்.
இதன் ஆவிக்குரிய விளக்கம் என்னவெனில், நாம் பொன்னாலும், வெள்ளியாலும் நம்மை அலங்கரிப்பதும், மற்றும் இவ்வித விலையுயர்ந்த பொருட்களை தேவனாக எண்ணுவதும், அதற்கு நம் உள்ளத்தில் முதன்மையான இடத்தை கொடுப்பதும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு முதற்ப்பேறானவராக இருப்பதற்கு பதில், இந்த விதமான காரியங்களுக்கு நாம் முதலிடம் கொடுப்பதும், மேலும் நாள் பார்த்தல், குறிகேட்குதல், குறிசொல்லுதல், உலக வழிபாடுகள் செய்தல், இன்னும் இவ்விதமான மாயையான காரியங்களுக்கு உள்ளத்தை கொடுத்தல், இவையெல்லாம் நம்மில் இருக்குமானால், இவைகள் பெலிஸ்தரின் துர்கிரியைகள். இவைகளையெல்லாம் கிறிஸ்துவின் வசனத்தால் நாம் அழித்து, கிறிஸ்துவை நாம் தரித்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 13: 4-8
தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.
அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள்.
எபிரெயரில் சிலர் யோர்தானையும் கடந்து, காத் நாட்டிற்கும் கீலேயாத் தேசத்திற்கும் போனார்கள்; சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்; சகல ஜனங்களும் பயந்துகொண்டு அவனுக்குப் பின்சென்றார்கள்.
அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள்.
தாணையம் இருந்த பெலிஸ்தியரை சவுல் முறியடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தியருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலர் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்கு பின் செல்லும் படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். கில்கால் என்பது இஸ்ரவேலுடைய நிந்தை நீங்கின இடமாயிருக்கிறது. பெலிஸ்தர் இஸ்ரவேலோடே யுத்தம் பண்ணும்படி பெத்தாவேலுக்கு கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள். அவர்கள் முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரை வீரரோடும், கடற்கரை மணலத்தனையான ஜனங்களோடும் கூடிவந்தார்கள். அப்போது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டை கண்ட போது, இஸ்ரவேல் ஜனங்கள் முட்காடுகளிலும், கெபிகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள். ஆனால் எபிரெயரில் சிலர் யோர்தானை கடந்து காத் நாட்டிற்கும் கீலேயாத் தேசத்திற்கும் போனார்கள்; சவலோ இன்னும் கில்காலிலே இருந்தான். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் பயந்து அவனுக்கு பின் சென்றார்கள். சவுல், சாமுவேல் குறித்த காலத்தின் படி ஏழு நாள் மட்டும் காத்திருந்தான். சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஜனங்கள் அவனை விட்டு சிதறிப்போனார்கள்.
மேலும் 1சாமுவேல் 13: 9-14
அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான்.
அவன் சர்வாங்கதகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.
நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே,
கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்.
சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.
இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.
மேற்கூறிய வார்த்தைகள் சவுல் சாமுவேல் வருவதற்கு முன்னால் சர்வாங்கபலியிட்டதால், கர்த்தர் அவனுடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது என்று சாமுவேலை அனுப்பி, சவலிடம் சொல்கிறார். ஆனால் சவுல் சர்வாங்க தகனபலியட்டதின் காரணத்தை எடுத்து சொன்னாலும் கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் கர்த்தருடைய கட்டளைக்கு மாறாக எந்தக் காரணமும் நாம் அவரிடத்தில் சொல்ல முடியாது.
மேலும் பிரியமானவர்களே இப்படி தான், நாம் இரட்சிக்ப்பட்டோம் என்று நினக்கிறோம்; ஆனால் பெலிஸ்திய எண்ணங்களுக்கு அடிமைகளாயிருக்கிறோம். அதனை தான் கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு விளக்கி காட்டி இஸ்ரவேலர் பல இடங்களில் ஒளித்துக்கொண்டார்கள் என்று சொல்கிறார். ஆதலால் நாம் ஒருபோதும் அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு அடிமையாகாமல், மற்றும் கர்த்தர் நம் உள்ளத்தில் வெளிப்படுமட்டும் காத்திருந்து நம்முடைய ஆத்துமாவை ஜீவபலியான காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.