தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 41:15 

இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அனுதினமும் புதிய கிரிபைகளால் நம்முடைய ஆத்துமாவை பரிசுத்தமாய் கூர்மையாக்கிக்கொண்டிருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருடைய கட்டளையை மீறி எந்த காரணத்தையும் காட்ட முடியாது என்பதனை குறித்து தியானித்தோம். 

ஆனால் அடுத்தபடியாக  நாம் தியானிப்பது என்னவெனில் 

1சாமுவேல் 13:14-16  

இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.

சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.

சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும் அவர்களோடேகூட இருக்கிற ஜனங்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தரோ மிக்மாசிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் சவுல் கர்த்தருடைய கட்டளையை மீறி சர்வாங்க தகனபலி செலுத்தினதினால், கர்த்தர் சாமுவேலை வைத்து உன் ராஜ்யபாரம் நிலைநிற்காது என்றார். இவ்விதமாக சாமுவேல், சவுலிடம் சொன்ன பின்பு, கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனை தமக்கு தேடி, அவனை இஸ்ரவேலுக்கு தலைவனாக கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை கைக்கொள்ளவில்லையே என்று சொல்லி எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்கு போனான்.  ஆனால் அவனோடகூட அறுநூறு பேர் இருந்தார்கள்.  சவுலும் அவனோடுகூட அவன் குமாரனாகிய யோனத்தானும் அவர்களோடே கூட இருந்த ஜனங்களும் கிபியாவில் இருந்து விட்டார்கள்.  பெலிஸ்தர்கள் மிக்மாசிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.  கொள்ளைகாரர் பெலிஸ்தியரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய் புறப்பட்டு வந்தார்கள்.  

எப்படியெனில் 1சாமுவேல் 13:17-22

கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டு வந்தார்கள்; ஒரு படை ஒப்ரா வழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப் போயிற்று.

வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்று; வேறொரு படை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று.

எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை.

இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு, பெலிஸ்தரிடத்துக்குப் போகவேண்டியதாயிருந்தது.

கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது.

யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது.

ஆனால் எபிரெயர்கள் பட்டயங்களையாகிலும், ஈட்டிகளையாகிலும் உண்டு பண்ணாதபடிக்கு பார்த்துக்கொள்ளுங்கள் என்று பெலிஸ்தர்கள் சொன்னதால் ஒரு கொல்லனும் அகப்படவில்லை.  அப்போது இஸ்ரவேலர் அவரவர் தங்கள் ஆயுதங்களை கூர்மையாக்குகிறதற்கு பெலிஸ்தியரிடம் போக வேண்டியதாயிருந்தது.   ஆனால் கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், மூக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும் மட்டும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடம் இருந்தது.  யுத்தநாளில் சவுலிடமும் யோனத்தானிடமே மட்டுமேயன்றி, ஜனங்கள் யாரிடமும பட்டயமும், ஈட்டியும் இல்லாதிருந்தது.  

பிரியமானவர்களே, இதன் விளக்கம் என்னவென்றால் இஸ்ரவேல் ஆவிக்குரிய யுத்தம் தலைமுறை தோறும், மற்ற ஜாதிகளிடத்தில் செய்யும் போது, கர்த்தர் யுத்தம் செய்வார் என்பதனை திருஷ்டாந்தபடுத்துகிறார்.  அதற்காக தான் கர்த்தர் நம்மை காலைதோறும் புதிய கிருபையினால் அபிஷேகித்து, புதியதாக்கி கூர்மையாக்குகிறார்.  இவ்விதமாக கூர்மையான அம்பாக்கி துலக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.