தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 13:6

கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் இருதயத்தின் விசுவாசத்திற்கேற்றபடி, கர்த்தரின் கட்டளைகளுக்கிணங்க பெலிஸ்திய கிரியைகளிலிருந்து விடுதலையடைய வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் அனுதினம் புதிய கிருபைகளால் நம்முடைய ஆத்துமாவை புதுப்பித்து பரிசுத்தபடுத்தி கூர்மையாக்கி நாம் ஆவிக்குரிய யுத்தம் செய்ய வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 14:1-7

ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.

சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள்.

சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள்.

யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பேர், மற்றொன்றுக்குச் சேனே என்று பேர்.

அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது.

யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.

அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.

மேற்ககூறப்பட்ட வசனங்களில் சவுலின் குமாரனாகிய யோனத்தான் ஒருநாள் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி; நமக்கு எதிராக அந்த பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணயத்திற்கு போவோம் வா என்றான்; அதனை அவன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை. சவுல் கிபியாவின் கடை முனையில் மிக்ரோனில் இருக்கிற ஒரு மாதள மரத்தினு கீழ் இருந்தான். சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்கு பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தை தரித்தவனுமாயிருந்தான்.  ஆனால் யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள்.  அவன் போன பாதையில இரு பக்கமும் செங்குத்தான  பாறை இருந்தது.   ஒன்றுக்கு போசேஸ் என்றும், அடுத்தது சேனே என்றும் பெயர். அந்த பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது.  யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி விருத்தசேதனம் இல்லாத அந்த தாணயத்திற்கு போவோம் வா, ஒருவேளை கர்த்தர் நமக்காக அந்த காரியத்தை செய்வார்.  அநேகம் பேரை கொண்டாகிலும், கொஞ்சம் பேரை கொண்டாகிலும் ரட்சி்கக தடையில்லை  என்றபோது அந்த ஆயுததாரி  உம்முடைய  இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே நாம் போம், உம்முடைய மனதுக்கேற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.  

அப்போது யோனத்தான் கர்த்தரிடத்திலிருந்து சில அடையாளங்களுக்காக 

1சாமுவேல் 14 :8-10  

அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம்.

நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.

எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான்.

மேற்க்கூறப்பட்ட வார்த்தைகள் கர்த்தரிடத்திலிருந்து நமக்குள்ள அடயாளங்கள்.  

பிரியமானவர்களே கர்த்தரிடத்திலிருந்து பெற்ற கட்டளைகளுக்கு இணங்கி நம் இருதயத்தின் விசுவாசத்திற்கேற்றபடி ஆவிக்குரிய வாழ்க்கையில் வாழ்ந்து பெலிஸ்திய கிரியைகளிலிருந்து விடுதலையாகும்படியாக ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.