தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யாக்கோபு 4:6
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தாழ்மை தரித்தால், கிருபை பெருகி, பரிசுத்தமாக வாழமுடியும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய இருதயத்தின் விசுவாசத்திற்கேற்றபடி, கர்த்தரின் கட்டளைகளுக்கிணங்க நாம் பெலிஸ்திய கிரியைகளிலிருந்து விடுதலையடைய வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 14: 7- 14
அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.
அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம்.
நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.
எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான்.
அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தரின் தாணையத்திற்குமுன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்: இதோ, எபிரெயர் ஒளித்துக்கொண்டிருந்த வளைகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி,
தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தானையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா; கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
யோனத்தான் தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான்; அவன் ஆயுததாரி அவன் பின்னாலே ஏறினான்; அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு முன்பாக மடிந்து விழுந்தார்கள்; அவன் ஆயுததாரியும் அவன் பின்னாலே வெட்டிக்கொண்டே போனான்.
யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய இருபதுபேர் அரையேர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள்.
மேற்க்கூறிய வார்த்தைகளின்படி, யோனத்தான், தன்னுடைய ஆயுததாரியோடு யுத்தத்திற்கு புற்பட்ட போது, அவன் சொன்னது ஆம் கடந்து அந்த மனுஷரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மை காண்பிப்போம். ஆனால் அவர்கள் நாங்கள் வரும் வரை அதில் நில்லுங்கள் என்னு சொன்னால், நாம் அவர்களிடத்திற்கு போகாமல் நம்முடைய நிலையிலே நிற்போம். ஆனால் நீங்கள் ஏறிவாருங்கள் என்னு நம்மிடம் சொல்வார்களானால், நாம் ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்பது; இது நமக்கு அடையாளம். இவ்விதமாக இவர்களை, அவர்களுக்கு முன்பாக காண்பித்தார்கள். அப்பொழுது பெலிஸ்தர்; இதோ எபிரெயர் ஒளித்து கொணடிருந்த வளைகளை விட்டு புறப்படுகிறார்கள் என்று சொல்லி, தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தானையும், அவன் ஆயுததாரியையும் நோக்கி எங்களிடத்திற்கு ஏறி வாருங்கள்; உங்களுக்கு புத்தி கற்ப்பிப்போம் என்றார்கள். அப்போது யோனத்தான் நன் ஆயுததாரியை நோக்கி என் பின்னாலே ஏறி வா; கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, யோனத்தான் கைகளாலும், கால்களாலும் தவழ்ந்து ஏறினான். அவன் ஆயுததாரி பின்னாலே ஏற பெலிஸ்தர்கள யோனத்தானுக்கு முன்பாக மடிந்துவிழுந்தார்கள்; ஆனால் ஆயுத தாரி அவன் பின்னாலே வெட்டிக்கொண்டே போனான் யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அடித்த அடிகளாலே ஏறக்குறைய இருபது பேர் அரையேர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள்.
மேலும் 1சாமுவேல் 14:15
அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாகி, தாணையம் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன தண்டிலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது.
மேற்கூறிய பிரகாரம் பெலிஸ்தியருக்கிடையில் தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது.
பிரியமானவர்களே, பெலிஸ்தியனிடத்தில் மிகவும் பெருமையிருந்தது. ஆனால் யோனத்தானோ, மிகவும் தாழ்மையோடு தவழ்ந்து ஏறும் போது, முன்பில் பெலிஸ்தியன் மடிந்து விழுகிறான். ஆயுததாரி, தன் ஆயுதங்களால் வெட்டி வீழ்த்துகிறான். இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் நாம் தாழ்மை தரிக்கும்போது நம்மில் கிருபை பெருகியதால் துன்மார்க்கமாகிய பெலிஸ்தியன் மடங்கடிக்கபட்டு, கிறிஸ்துவின் வசனத்தால் வெட்டிவீழ்த்தப்படும். அப்போது நம் உள்ளத்தில் பெரிய மாற்றங்கள் சம்பவிக்கும. இவ்விதமாக நம்முடைய ஆத்துமா பரலோகத்துக்குரிய பரிசுத்தம் உண்டாகக்கூடும். இவ்விதம் நாமும் ஒப்புக்கொடுப்போம்,
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.