தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான் 17:16
நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் உலக ஆசை இச்சையாகிய இன்பங்களை விட்டு விட்டால் நமக்கு இரட்சிப்பு உண்டு.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தாழ்மை தரித்தால் கிருபைப் பெருகி பரிசுத்தமாக வாழ முடியும் என்று தியானித்தோம்.
ஆனால் அடுத்தபடியாக தியானிப்பது 1சாமுவேல் 14:16-23
பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த ஜாமக்காரர் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, ஒருவர்மேல் ஒருவர் விழுகிறதைக் கண்டார்கள்.
அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம்பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.
அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது.
இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசுகையில், பெலிஸ்தரின் பாளயத்தில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான்.
சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.
இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்து வந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள்.
எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.
இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை ரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன்மட்டும் நடந்தது.
மேற்கூறப்பட்டவைகளில் பெலிஸ்தர்கள் விழுகிறதை பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த ஜாமகாரர் பாரத்தார்கள். அப்பொழுது சவுல் தன்னோடேக்கூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம் பார்க்க சொன்ன போது யோனத்தானும், அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்றார்கள். அப்பழுது சவுல் அகீயாவிடம் தேவனுடையப் பெட்டியை கொண்டு வா என்றான். அந்நாட்களில் தேவனுடைய பெட்டி இஸ்ரவேல் புத்தரரிடம் இருந்தது. இப்படியாக அவன் ஆசாரியனிடம் பேசிக்கொண்டிருக்கையில், பெலிஸ்தரின் பாளயத்தில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது. அப்போது சவுல் ஆசாரியனை பார்த்து இருக்கட்டும் என்று சொல்லி, அவனோடிருந்த ஜனங்களும், கூட்டங்கூடி போர்களத்திற்கு போனார்கள். மேலும் ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று. இதற்கு முன் பெலிஸ்தரோடு கூடி அவர்களோடேகூட பாளயத்திலே திரிந்து வந்த எபிரெயரும், சவுலோடும், யோனத்தானோடும் கூட இருந்த இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள். எப்பிராயீம் மலைகளில் ஒளித்திருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர்கள் முறிந்தோடுகிறதை கேள்விபட்ட போது, யுத்தத்திலே அவர்களை பின் தொடர்ந்தார்கள். இப்படி அன்றைய தினம் கர்த்தர் இஸ்ரவேலரை ரட்சித்தார். அந்த யுத்தம் பெத்தாவேன் மட்டும் நடந்தது.
பிரியமானவர்களே, இந்த இரட்சிப்பு நாம் ஆத்துமாவில் இருக்கிற உலக இன்பங்களிலிருந்து விடுதலை ஆகி இரட்சிப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்கு கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். அல்லாமலும் யாருடைய உள்ளம் தாழ்மை தரிக்கிறதோ அவர்களில் இவ்வுலக இன்பங்களிலிருந்து அவர்கள் விடுதலை பெறமுடியும். மேலும் ஒவ்வொரு உள்ளங்களையும் உலக ஆசை, இச்சையாகிய இன்பங்கள் வாழ்க்கையை நெருக்கிக்கொண்டேயிருக்கும். இவ்விதமான நெருக்கத்திலிருந்து நாம் விடுதலையாகும்படியாக கிறிஸ்துவை (தாழ்மை) தரித்துக்கொள்ள வேண்டும். அல்லாமலும் மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்களை நாம் பார்க்கும் போது பல உலக உல்லாசமான வாழ்க்கையாகிய இன்பங்கள் உண்டு. ஆனால் முதலில் சில முக்கியமானதை நாம் கிறிஸ்துவின் வசனத்தால் முறியடிக்கும் போது, மற்றவைகள் எல்லாம் தானாகவே நம்மை விட்டு போகும் என்பது தான் நிச்சயம் என்பதனை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். இவ்விதமாக நாம் உலக ஆசை, இச்சையாகிய இன்பங்களை விட்டு விட்டு கர்த்தராகிய இயேசுவையே நாம் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.