தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 7:12 

ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒரு போதும் கிறிஸ்துவின் இரத்தமேயன்றி வேறொரு எந்த இரத்தமும் புசிக்கலாகாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் உலக ஆசை, இச்சையாகிய இன்பங்களை விட்டுவிட்டால் கர்த்தரிடத்திலிருத்து நமக்கு இரட்சிப்பு பெற்றுக்கொள்ள முடியும் என்று தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 14:24-35 

இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள்.

தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது.

ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.

யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது.

அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான்.

அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்; நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.

இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.

அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள்.

அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.

அப்பொழுது: இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள்.

நீங்கள் ஜனத்திற்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டுவந்து, அங்கே அடித்தார்கள்.

பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.

மேற்கூறப்பட்டவைகளை நாம் தியானிக்கும் போது இஸ்ரவேலரை கர்த்தர் பெலிஸ்தியரிடத்திலிருந்து இரட்சித்தார்; ஆனால் இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; காரணம் என்னவென்றால் சவுல் சொன்னது நான் என் சத்துருக்கள் கையில் பழிவாங்கவேண்டும்; ஆதலால் சாயங்காலம் வரையிலும் யாரும் போஜனம் பண்ணக்கூடாது என்றும்; அவ்விதம் பொறுக்காமல் போஜனம் பண்ணுகிறவன் சபிக்கப்பட்டவன் என்றும் சொல்லியிருந்தபடியால் யாரும் எவ்வளவேனும் போஜனம் பண்ணாதிருந்தார்கள்.  தேசத்து  ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது. ஜனங்கள் காட்டிலே வந்த போது தேன் ஒழுகிக் கொண்டிருந்தது.  ஆனாலும் யாரும் அதனை கையினாலே தொட்டு வாயிலே வைக்கவில்லை;  ஏனென்றால் ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.  

ஆனால் யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதை கேள்விபடவில்லை: அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியிலே தேன்கூட்டை குத்தி, அதை எடுத்து தன் வாயிலே போட்டதினால் அவன் கண்கள் தெளிந்தது.  அதனை கண்ட  இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவன் யோனத்தானிடம் இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டதினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்று சொன்ன போது; யோனத்தான் என் தகப்பனார் தேசத்தின் ஜனங்களை கலக்க படுத்தினார்; ஆனால் நான் தேனிலே கொஞ்சம் ருசி பார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்தது என்றார்.  ஆனால் யோனத்தான் சொன்னது இன்றைக்கு ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால் எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தியருக்குள் உண்டான சங்காரம் அதிகமாயிருந்திருக்குமே; ஆனால் அவர்கள் பெலிஸ்தியரை மிக்மாசிலிருந்து ஆயலோன் மட்டும் முறியடித்தபோது  ஜனங்கள் விடாய்த்திருந்தபடியால் அவர்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும், கன்றுகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.  

இவ்விதமாக அவர்கள் கர்த்தருடைய நியாயப்பிரமாண கட்டளையை மீறினார்கள்.  ஏனென்றால் கர்த்தர் சொல்கிறார் மாம்சத்தை அதன் இரத்தத்தோடே புசிக்க வேண்டாம் என்று 

லேவியராகமம் 17:10-13  

இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.

அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்

ஆதலால் மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் இஸ்ரவேலர் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்தார்கள்.  

ஆதலால் பிரியமானவர்களே நாம் ஒரு போதும் கர்த்தருடைய கட்டளையை மீறக்கூடாது.  மேலும் அவர்களை குறித்து  

1சாமுவேல் 14:33-35  

அப்பொழுது: இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள்.

நீங்கள் ஜனத்திற்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டுவந்து, அங்கே அடித்தார்கள்.

பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.

மேற்கூறிய வார்த்தைகளின் படி இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்தார்கள் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.   பின்பு சவுல் ஜனங்களிடம் ஒரு பெரிய கல்லை உருட்டி கொண்டு வாருங்கள் என்று சொன்னதுமன்றி; இரத்தத்தோடிருக்கிறதை சாப்பிடுகிறதினால், கர்த்தருக்கு ஏலாத பாவஞ் செய்யாதபடிக்கு அவரவர் ஆட்டையும், மாட்டையும், என்னிடத்தில் கொண்டு வந்து இங்கே அடித்து பின்பு சாப்பிட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லுங்கள் என்று கட்டளையிட்டதுபோல் அவர்கள் செய்தார்கள்.  பின்பு சவுல் கர்த்தருக்கு பலிபீடம் கட்டினான்.  அவன் கர்த்தருக்கு கட்டின முதலாம் பலிபீடம். இவ்விதமாக கர்த்தருடைய கட்டளையை மீறாதபடி ஜாக்கிரதையாக நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.