தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 10:28 

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமா கொலைசெய்யப்படாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் நாம் கிறிஸ்துவின் இரத்தமேயன்றி வேறே எந்த இரத்தமும் புசிக்கலாகாது என்று தியானித்தோம்.  மேலும் இஸ்ரவேல் புத்திரர்கள், யோனத்தான் காரணமாக இரத்தம் புசித்தார்கள் என்பதனை குறித்தும், அதனை அறிந்த சவுல் அவர்கள் செய்த தவறை உணர்த்தி பின்பு கர்த்தருக்கு முதலாம் பலிபீடம் கட்டினான் என்பதனையும் தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1சாமுவேல் 14:36-46 

அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.

அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்துபோகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை.

அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்துவந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.

அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை.

அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப் பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.

அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள்.

எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.

அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.

அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான்வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான்.

ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள்.

சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் சவுல் இஸ்ரவேல் ஜனங்களிடம் இன்று இராத்திரியிலே தொடர்ந்து போய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களை கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான்.  அப்போது இஸ்ரவேல் புத்திரர் உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.  ஆனால் ஆசாரியனோ நாம் தேவ சந்நிதியில் சேருவோம் என்றார்கள். அப்படியே நாம் பெலிஸ்தியனை தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர் எந்த மறுபதிலும் பேசாமல் இருந்தார். அப்போது சவுல், ஜனத்தின் தலைவர்களே; இங்கே நீங்கள் யாவரும் சேர்ந்து வந்து இந்த பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.  இது என்னுடைய குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாக வேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஆணையைக் கொண்டு சொல்கிறேன் என்றான்.  அதற்கு யாரும் பிரதியுத்தரம் சொல்லவில்லை.  

பின்பு அவன் இஸ்ரவேலரை நோக்கி நீங்கள் அந்த பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்த பக்கத்திலே இருப்போம் என்றான்.  அப்போது இஸ்ரவேலர் உம்முடைய கண்களுக்கு விருப்பமானபடி செய்யும் என்றான்.  அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி , நிதானமாய் கட்டளையிட்டு நியாயத்தை விளங்கபண்ணும் என்று சொன்னதற்கு; சவுலின் மேலும், யோனத்தான் மேலும் சீட்டு விழுந்தது; ஜனங்களோ தப்பினார்கள்.  பின்பு சவுல் கூறியது போல் சவுலின் பேரிலும், யோனத்தானின் பேரிலும் சீட்டு போட்டார்கள்; அப்போது யோனத்தான் பேரில் சீட்டு விழுந்தது. அப்போது சவுல் யோனத்தானிடம், நீ செய்தது என்ன?  எனக்கு சொல் என்றான்.  அதற்கு யோனத்தான் சொன்னது என் கையில் இருந்த கோலினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசி பார்த்தேன்; அதற்கு நான் சாக வேண்டும் என்றான்.  அதற்கு சவுல்; மகனாகிய யோனத்தானிடம் நீ சாகத்தான் வேண்டும் என்றான்;  இல்லையென்றால் தேவன் அதற்கு சரியாகவும, அதற்கு அதிகமாகவும் செய்ய கடவர் என்றான்.  அதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் சவுலை நோக்கி சொன்னது; இஸ்ரவேலிலே இவ்வளவு பெரிய இரட்சிப்பை செய்த யோனத்தான் கொலைசெய்யப்படக் கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிர் போலும் தரையிலே விழப்போகிறதில்லை என்று  கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டு சொல்லுகிறோம் என்றார்கள்.  ஏனென்றால்  தேவன் துணை நிற்க அவன் இந்த காரியத்தை நடப்பித்தான் என்றும், அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு ஜனங்கள் அவனை தப்புவித்தார்கள். பின்பு சவுல் பெலிஸ்தியரை பின் தொடராமல் திரும்பினான்; பெலிஸ்தியரும் தங்கள் வழியே போனார்கள்.  

பிரியமானவர்களே, யோனத்தானோடே கர்த்தர் கூட இருந்து தான் இந்த பெரிய இரட்சிப்பை இஸ்ரவேலுக்கு கட்டளையிட்டார்.  ஆனால் அதன் பின்பு தான் அவன் வாழ்க்கையில் உபவாசத்தை அவமதித்தான், மற்றும் இஸ்ரவேலர் இரத்தம் புசித்து பாவம் செய்வதற்கு காரணமாயிருந்ததால் தான் , கர்த்தர் அவன் பேரில் சீட்டு விழ செய்தார்.  ஆனால் ஜனங்களுடைய கண் திறவாமல் இருந்ததால் அவன் செய்த தவறை அவர்கள் உணராமல் இருந்தார்கள்.  மேலும் ஏன் கர்த்தர் இதனை நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால்  நாம் கர்த்தருடைய கட்டளையை மீறும் போது கர்த்தர் நம்முடைய ஆத்துமாவை கொலை செய்கிறார்.  ஆனால் யோனத்தானை  ஜனங்கள் தப்புவித்தது போல் நம்மை எந்த மனுஷர்களாலும் தப்புவிக்க முடியாது.  ஏனென்றால் நமக்கு மத்தியஸ்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  அவர் நமக்காக இரத்தம் சொரிந்தார்; நாம் உடன்படிக்கைக்கு துரோகம் பண்ணினால் கர்த்தர் நம்மை தப்பவிடார்; நம்முடைய ஆத்துமாவை கொலை செய்து, பின்பு நாம் நம்முடைய தப்பிதத்தை உணர்ந்து, மன்னிப்புபெற்றுக்கொண்டு, அவர் நம்மேல் மனஸ்தாபபட்டால் நம்மை மீண்டும் உயிர்பிப்பார்.  

ஆதலால் பிரியமானவர்களே நாம் அனுதினம் நம்முடைய ஆத்துமா கொலைசெய்யாதபடி ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும்.  ஒப்புக்கொடுப்போம்,

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.