தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 25:21
உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கர்த்தருக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாக காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் நம்முடைய ஆத்துமா கொலைசெய்யப்படாதபடி ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். மேலும் அதன் திருஷ்டாந்தத்தை கர்த்தர் நமக்கு சவுலின் குமாரனாகிய யோனத்தானை காட்டி தெளிவுப்படுத்துகிறார்.
அல்லாமலும் கர்த்தரின் கட்டளையை மீறினதினால் பெலிஸ்தியரை முற்றிலும் முறிய அடிக்கவில்லை என்பதனை பார்க்கிறோம். இதன் கருத்துக்களை நாம் ஆராயும் போது, நாமும் கர்த்தரின் கட்டளைகளை விட்டுவிட்டால் நம்முடைய வாழ்விலும் பெலிஸ்திய எண்ணங்களாகிய உலக ஆசை, அப்படிப்பட்ட எண்ணங்கள் முற்றிலும் ஒழிந்து போகாது என்பதனை நாம் கண்டுணர்ந்துக்கொண்டு, கர்த்தருடைய கட்டளைகளை விட்டுவிடாதபடி, அதனை பின்பற்றி, நம்முடைய ஆத்துமாவின் வளர்ச்சியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமு 14: 46-52
சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள்.
இப்படிச் சவுல் இஸ்ரவேலை ஆளுகிற ராஜ்யபாரத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லாச் சத்துருக்களுமாகிய மோவாபியருக்கும், அம்மோன் புத்திரருக்கும், ஏதோமியருக்கும், சோபாவின் ராஜாக்களுக்கும், பெலிஸ்தருக்கும் விரோதமாக யுத்தம்பண்ணி, எவர்கள்மேல் படையெடுத்தானோ, அவர்களையெல்லாம் அடக்கினான்.
அவன் பலத்து, அமலேக்கியரை முறிய அடித்து, இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான்.
சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள்; அவனுடைய இரண்டு குமாரத்திகளில், மூத்தவள் பேர் மேரப், இளையவள் பேர் மீகாள்.
சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் குமாரத்தி: அவனுடைய சேனாபதியின்பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறியதகப்பனாகிய நேரின் குமாரன்.
கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் குமாரன்.
சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின் மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக்கொள்ளுவான்.
மேற்கூறப்படுகிற வார்த்தைகள் என்னவென்றால் யோனத்தானுடைய காரணத்தால் சவுல் பெலிஸ்தியரை தொடராமல் திரும்பி விடுகிறான், இப்படி சவுல் இஸ்ரவேலரை ஆளுகிற ராஜ்யபாரத்தை பெற்றுக்கொண்டு சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லா சத்துருக்களாகிய மோவாபியர்,அம்மோனியர், ஏதோமியர், சேபாவின் ராஜாக்களுமாகிய எல்லாருக்கும், பெலிஸ்தியருக்கும் விரோதமாக யுத்தம் பண்ணி, எவர்கள் மேல் படையெடுத்தானோ அவர்களையெல்லாம் அடக்கினான். மேலும் அவன் பலத்து அமலேக்கியரை முறியடித்து, இஸ்ரவேலை கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான். மேலும் சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா, என்பவர்கள்; அவனுடைய இரண்டு குமாரத்திகளில் மூத்தவள் மோப், இளையவள் பேர் மீகாள். அவனுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் குமாரத்தி, அவனுடைய சேனாபதியின் பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறிய தகப்பனாகிய நேரின் குமாரன். கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் குமாரன். சவுல் இருந்ந நாளெல்லாம் பெலிஸ்தியரின் மேல் கடினமான யுத்தம் நடந்தது. சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும், பலசாலியையாகிலும் காணும் போது அவர்கள் எல்லாரையும் தன்னிடமாக சேர்த்துக்கொள்வான்.
பிரியமானவர்களே,கர்த்தர் சவுலை ராஜாவாக அபிஷேகிக்கும்போது, அவனுக்கு பெரிய காரியத்தை கரத்தில் கொடுக்கிறதை பார்க்கிறோம். ஆனால் அவன் கர்த்தருக்கு கீழ்படியும் வரையிலும் அவனை வைத்து பெரிய காரியங்களை செய்துக் கொண்டிருக்கிறார். நாமும் கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்டால் எப்போதும் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த அதிகாரம் நாம் வாசிக்கும் போது, சவுல் கர்த்தருக்கு பயந்து உண்மையுள்ளவனாக இருக்கிறான். மேலும் பராக்கிமசாலிகளையும், பலசாலிகளையும் தன்னிடமாக சேர்த்துக்கொள்ளும் கிருபை அவனுக்கு உண்டாயிருந்தது. அவன் உண்மையாக இருந்த போது கர்த்தர் அவனோடே இருந்தார். அதுபோல நாமும் உண்மையுள்ளவர்களாக இருக்கும் வரையில் கர்த்தர் நம்மோடு இருப்பார், ஜாதிகளை துரத்துவார், நம்மை பரிசுத்தப்படுத்தி ஆசீர்வதிப்பார்; இவ்விதமாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.