தேவனுக்கே மகிமையுண்டாவதாக
லூக்கா 9:23
பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தன்னை தான் முழுமையும் வெறுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும், கர்த்தருக்கு கீழ்படிந்து உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1சாமுவேல் 15:1-8
பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.
சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான்.
சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்.
அப்பொழுது சவுல்: ஆவிலாதுவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,
அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான்.
மேற்க்கூறிய வசனங்களில் சாமுவேல் சவுலை நோக்கி இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்கு கர்த்தர் என்னை அனுப்பினார்; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தை கேளும். சேனைகளின் கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்த போது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். ஆதலால் இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையுங் சங்கரித்து, அவன் மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையம் ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும் கழுதைகளையும் கொன்று போடக் கடவாய் என்கிறார் என்று சாமுவேல் சொன்னான். அப்பொழுது சவுல் இதனை ஜனங்களுக்கு அறியப்படுத்தி தெலாயிமிலே அவர்களை தொகைப்பார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம் பேராயிருந்தார்கள்.
பின்பு சவுல் அமலேக்குடைய பட்டணம் மட்டும் வந்து பள்ளதாக்கிலே பதிவிடை வைத்தான். சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடே கூட உங்களை வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து விலகி போங்கள் என்றான். எப்படியென்றால் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வரும் போது, நீங்கள் எல்லாரும் அவர்களுக்கு தயவு செய்ததினால், இன்றைக்கு அவர்கள் நடுவிலிருந்து விலகி போங்கள் என்றான். அப்படியே அவர்கள் நடுவிலிருந்து விலகி போனார்கள். அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்க போகிற எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து, ஆகாகை உயிரோடே பிடித்தான். ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரமாக்கினான்.
பின்பு 1சாமு 15:9
சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.
மேற்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கையில் சவுலும், ஜனங்களும், ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல் தரமானவைகளையும், இரண்டாம் தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழிக்க மனதில்லாமல் தப்ப வைத்து; அற்பமானவைகளும், உதவாதவைகளுமானவைகளையும், சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப் போட்டார்கள். பிரியமானவர்களே மேற்கூறியவைகள் நமக்கு திருஷ்டாந்தத்துக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது.
என்னவென்றால் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து மடங்கி வரும் போது அமலேக்கியர் வழி மறித்தார்கள் என்றால், நாம் எகிப்தாகிய பாவத்தின் அடிமையினின்று கர்த்தர் தம்முடைய இரத்தத்தால் நம்மை மீட்டு, இவ்வுலக கிரியைகளை விட்டு மனந்திரும்பி வரும் போது, ஏதாவது பொல்லாத கிரியைகளாகிய இவ்வுலக எண்ணங்கள் நம்மை நெருக்கும் போது நாம் ஒவ்வொன்றாக கர்த்தரை விட்டு விலகி போவோம். ஆதலால் கர்த்தர் அமலேக்கியர்களை மொத்தமாக அழித்து தீர்க்க வேண்டும் என்கிறார். ஆனால் சவுலோ அதன் ராஜாவை உயிரோடே பிடிக்கிறான். மேலும் முதல் தரம், இரண்டாம் தரம் இவை எல்லாம் காக்கப்படுகிறது. இவை என்னவென்றால் நம்மில் அநேகர் குறைந்ததும், ஒன்றுக்கும் உதவாதவைகளை நீக்கி விட்டு, விலையுயர்ந்ததை பத்திரப்படுத்தி வைத்து விட்டு; உலகத்தை ஜெயித்தேன் என்று சவுல் சொன்னது போல் சொல்வார்கள். ஆனால் எல்லாவற்றையுங் குறித்து கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
ஆதலால் நாம் நம்முடைய உள்ளத்தில் இருக்கிற உலக மேன்மை, அந்தஸ்து மற்றும் மனதின் உயர்ந்த எண்ணங்களாகிய உலக காரியங்களை எல்லாம் நம்மை விட்டு அழிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.